No icon

நன்றி தெரிவிக்கும் இம்பால் பேராயர்

இந்தியாவின் இலத்தீன், சீரோ-மலபார் மற்றும் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களை உள்ளடக்கிய CBCI ஆயர் பேரவையின் கூட்டமானது பெங்களூருவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கு கொண்ட இம்பால் பேராயர் லினஸ் நெலி அவர்கள், மோதல்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் மணிப்பூர் மாநில மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மிக உதவிகளை வழங்கி வரும் இந்தியக் கத்தோலிக்கச் சமூகத்திற்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். மணிப்பூரில் அண்மை மோதல்களால் ஏறக்குறைய 180 பேர்கள் கொல்லப்பட்டதும், பல வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சேதமாக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்த பேராயர், ஏறக்குறைய 300 கோயில்களும், கல்வி நிலையங்களும் அழிவுக்குள்ளாகின என்றும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தவர்களாக மாறியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். வன் முறைகள் இன்னும் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிய பேராயர், இவ்வன்முறைகளால் மணிப்பூரின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment