No icon

நோபல் பரிசு பெற்ற ஈரானியப் பெண்ணுக்கு அன்னை தெரேசா விருது

மேற்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தன்னார்வக் குழுவானஹார்மனி அறக்கட்டளைஆண்டுதோறும் சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதினை வழங்கி வருகிறது. அதன்படி  இந்த ஆண்டு சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதானது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானிய ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான நர்கேஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஹார்மனி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதானது, சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதுஅதனடிப்படையில் பெண் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எதிரான அவரது துணிச்சலான போராட்டத்தைக் கருத்தில் கொண்டும் நர்கேஸ் முகமதி அவர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட உள்ளது என்று ஹார்மனி அறக்கட்டளை குழுவின் நிறுவுநர், தலைவர் ஆபிரகாம் மத்தாய் தெரிவித்துள்ளார்.

நவம்பர் கடைசி வாரத்தில் வழங்கப்படவிருக்கும் இவ்விருதினை நர்கேஸ் முகமதி சார்பாக அவரது கணவர் தாகி ரஹ்மானி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஏற்க ஒப்புக்கொண்டதாக மத்தாய் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்றவர்களான தவக்கோல் கர்மன், மலாலா யூசுப்சாய் மற்றும் ஈராக்கில் ISIS பிடியில் இருந்து தப்பிய யாசிதி பெண் லைலா தலோ குதர் அலாலி ஆகியோரும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

Comment