No icon

சமூகக் குரல்கள்

கண்ணுக்கு எதிரே தவறுகள் நடக்கிறபோது, அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், தனக்குத் துன்பம் வந்தால் மட்டும் உலகம் கெட்டுவிட்டதாகப் புலம்புகிறோம். உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால், தமது கைகளால் தடுக்கட்டும். இயலாவிடில், நாவால் தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால், தமது உள்ளத்தால் தடுக்கட்டும் என்று போதிக்கிறது இஸ்லாம். தன்னைப்போல் பிறரையும் நேசி என்கிறது கிறிஸ்தவம். அன்பே சிவம் என்கிறது இந்து தர்மம். ஆனால், எல்லாம் ஏட்டில் தத்துவமாகவே இருக்கின்றன. எவரும், எதையும் நடைமுறையில் பின்பற்றக் காணோம்!”

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

அரசும், அதிகார வர்க்கமும் மக்களைக் காப்பாற்றுவதை விட, சாதியைக் காப்பாற்றுகிற கடமையையே செய்கின்றன. நமது கல்வி முறையில் சாதி ஒழிப்புப் பற்றிய அக்கறையைக் கொண்டு வருவது மிக அவசியம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை, சமத்துவமின்மையைக் களைவோம். சமூக நீதியை விரும்புகிறத் தோழமைச் சக்திகள், அதைச் சாதி ஒழிப்பில் இருந்தே தொடங்குவோம்.”

- திரு. தொல். திருமாவளவன்,

பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

சங்க இலக்கியங்கள் தமிழும், தமிழனும் கடந்து வந்த பாதையை அடுத்தச் சந்ததிகளுக்குத் தெரியப்படுத்தும் பொதுவான நோக்கில் படைக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பெருமையையும், வரலாற்றையும் பறைசாற்றும் இத்தகைய சங்க இலக்கியங்களைப் போற்றிப் பாதுகாப்பது, தமிழர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.”

- நீதிபதி திரு.ஆர். சுரேஷ் குமார்

உயர் நீதிமன்ற நீதிபதி

Comment