No icon

தேர்வு பயம்: இந்தியத் திரு அவையின் அனுதாபம்

தேர்வு பயத்தால் அல்லது தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதைக் குறித்து இந்தியத் திரு அவைத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 18-ஆம் தேதி இராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்கிற ஊரில் 16 வயது மாணவி ஒருவர்நீட்தேர்வுப் பயிற்சிக்குச் சென்று வந்த பிறகு விசம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு முன்பாக இதுவரை 26 மாணவர்கள் இதே ஊரில்நீட்தேர்வு பயம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக இராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்தாலும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாலும் பல இளம் மாணவ-மாணவிகள் தற்கொலையை ஒரு தீர்வாக எடுத்துக்கொள்கின்றனர். கத்தோலிக்கத் திரு அவையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் இருக்கின்றன. கல்வியுடன் அவர்களுக்கு ஆலோசனையும் அளிக்கப்படுகிறது. இன்று பலநீட்பயிற்சி மையங்கள் வியாபாரக்கூடங்களாக மாறிவிட்டன. பணம் இருக்கும் மாணவ-மாணவிகள் மிகப்பெரிய கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். நடுத்தர மக்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுச் சேர்கிறார்கள். ஆனால், அனைவரும் தேர்ச்சி அடைவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. தேசிய அளவில் 2021 இல் மட்டுமே 13,000 மாணவர்கள் இந்தத் தேர்வு பயத்தால் தற்கொலை செய்திருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது மாணவர்களின் தற்கொலை விகிதம் 4.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பது வருத்தத்தைத் தருகிறது.

Comment