No icon

சமூகக் குரல்கள்

இன்று எல்லா அறநெறிகளும் புறந்தள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் சுயநலமே காரணமாக உள்ளது. ‘ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையை யாராலும் நிறைவேற்ற முடியாது.” 

- மகாத்மா காந்தியடிகள்

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது, சாக்கடைக் கழிவு நீரை சாலைகளில் வெளியேற்றுவது உள்ளிட்டவற்றால் கொசுக்கள், ஈக்கள், எலிகள் உள்ளிட்டவை பெருகி வளர்கின்றன. பொதுமக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாமல் இவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது.”

- திரு. ஜி. பாலச்சந்திரன்

மேற்கு வங்க மேனாள் கூடுதல் தலைமைச் செயலர்

வளமான எதிர்காலத்துக்கு எண்ம (Digital) தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்துவது அவசியம். அனைவருக்குமான வளமான, மீள் தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க சர்வதேசச் சமூகத்தின் பிணைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சர்வதேசச் சமூகம் ஒன்றுபட்டால், உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

- திருமதி. கிறிஸ்டலினா ஜார்ஜியேவா

மேலாண் இயக்குநர்  சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்)

சூரியனுக்கு ஆய்வூர்தி அனுப்பியது சாதனை என்றால், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பாதாளச் சாக்கடையில் மனிதர்கள் இறங்கும் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர, தஞ்சை இளைஞர் விமல் கோவிந்த் கண்டுபிடித்திருக்கும் அற்புதக் கருவி கொண்டாடப்படவேண்டிய சாதனை அல்லவா! இஸ்ரோ சாதனைகள்போல ஏனைய சாதனைகளும் பாராட்டப்பட வேண்டும்; விருதுகள் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். விண்கலம் அனுப்புவது மட்டுமே அறிவியல் என்கிற ஒற்றை மனநிலையிலிருந்து அடுத்தத் தலைமுறையை விரிந்த அறிவியல் பார்வைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.”

- ஆயிஷா இரா. நடராசன்

கல்வியாளர்

Comment