No icon

மதமாற்றத்தில் ஈடுபடுவதாகப்  பொய் வழக்கு!

பா... ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தின்  மௌவு மாவட்டத்தில்ஈஸ்வர்தாம்என்ற கத்தோலிக்கச் செப மையம் உள்ளது. இந்தக் கத்தோலிக்கச் செப மையம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறது என ஒருசில இந்து அடிப்படைவாதக் குழுக்கள் அளித்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை இம்மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. “இந்தச் செப மையம் எப்போதுமே மதமாற்ற நட வடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டோரை எப்போதும் வரவேற்கும் இல்லமாகச் செயல்பட்டு வருகின்றதுஉத்திரப்பிரதேச அரசின் சட்டங்களுக்கு எதிராக ஒருபோதும் சென்றதில்லைஎன்று இச்செப மையத்தின் இயக்குநர் அருள்பணி. வினீத் பெரைரா கூறினார். ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு அருள் பணி. பெரைரா சட்ட விரோதமாகக் கூட்டத்தைக் கூட்டினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, காவல்துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், மதமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கடுமையாக்க வேண்டும் எனச் சில இந்து அடிப்படைவாதிகளால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment