No icon

ஆயர்களும், தகவல் அறியும் உரிமை சட்டமும்

இந்திய அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) ஏற்படுத்தியது. இச்சட்டத்தின்படி, எந்தவோர் இந்தியக் குடிமகனும், அரசாங்கத்திடமிருந்து தான் விரும்பும் ஆவணத்தைப் பெற முடியும். கோவாவைச் சேர்ந்த ஆண்டோனியா மிச்சேல் ஆபேல் என்பவர், 2011 ஆம் ஆண்டு கோவாவின் பேராயர் பிலிப் நேரி பெரோரா மற்றும் மும்பை கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் நியமன ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டுமென்றும், மறைமாவட்டங்களின் திருமண விலக்கீடு குறித்த ஆவணங்களை ஆய்வதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையத்தின் ஆணையர் இவ்விரு மறைமாவட்ட ஆயர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டார். ஆனால், இவ்விரு மறைமாவட்டங்களும் ஆவணங்களை வெளியிட மறுத்து விட்ட நிலையில், ஆணையர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். ஆகஸ்டு 17 ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்ஆயர்கள் அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசு வேலைகளிலோ ஈடுபடுபவர்கள் அல்லர்; இவர்களுக்கு இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது. எனவே, அவர்கள் இந்த ஆவணங்களை வெளியிட அவசியம் இல்லைஎன்று தீர்ப்பளித்தது. ஆகவே, ஆயர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்; ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர்!

Comment