No icon

அருள்பணி. பாஸ்டின் லூகாஸ் லோகோ

தேவாலயம் கட்டுவதற்கு இடையூறு

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல கட்டாய மதமாற்றச் சட்டத்தை நடைமுறையில் இருந்து நீக்கினர். சட்டம் நீக்கப்பட்ட பிறகு சிறுபான்மையின மக்கள் எது செய்தாலும், அதற்குச் சில இந்து அடிப்படைவாதக் குழுக்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. உதாரணமாக, சிக்மகளூர் மாவட்டத்தில் லோகவாலி கிராமத்தில் கிறிஸ்தவர்கள் கட்டி வரும் ஆலயத்தை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற இந்து அடிப்படைவாதக் குழுக்கள் எதிர்த்து வருகின்றன. ‘இந்தக் கிராமத்தில் எந்தக் கிறிஸ்தவக் குடும்பங்களும் இல்லை. பிறரை மதம் மாற்றவே இங்கு இந்த ஆலயத்தைக் கட்டுகிறார்கள்’ என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து, கர்நாடகா ஆயர்கள் பேரவையின் செய்தித் தொடர்பாளர் அருள்பணி. பாஸ்டின் லூகாஸ் லோகோ, “இந்தக் கிராமத்தில் கிறிஸ்தவக் குடும்பங்கள் இருக்கின்றன. தங்கள் வழிபாட்டிற்காக அவர்கள் கட்டும் ஆலயத்தை வேண்டுமென்றே இந்து அடிப்படைவாதக் குழுக்கள் தடுத்து நிறுத்துகின்றன. மாவட்டத்திலும், மாநிலத்திலும் அமைதியைச் சீர்குலைக்கவே இவ்வாறு இவர்கள் செய்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அவரவர் தங்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைத்துக் கொள்ளலாம். இதில் தலையிட இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Comment