No icon

கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியா?

ரத்துசெய்த கேரள நீதிமன்றம்

இடுக்கி மாவட்டம், தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற சி.பி.எம் வேட்பாளரும் தமிழருமான .ராஜா அவர்களின் வெற்றியை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனித் தொகுதியான தேவிக்குளத்தில் தான் கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து .ராஜா போட்டியிட்டதாகவும், அதனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.குமார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். .ராஜாவின் தந்தை ஆன்றணியும், அவருடைய தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவருடைய தாயின் இறுதிச்சடங்கு சர்ச்சில் வைத்து நடைபெற்றது எனவும், .ராஜாவும் கிறிஸ்தவ சபையின் அங்கமாக இருப்பதாகவும் டி.குமார் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், ராஜாவின் மனைவி, பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் டி.குமார் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சி.எஸ். சபையின் குடும்பப் பதிவேடு, தகனப் பதிவேடு உள்ளிட்டவற்றை கோர்ட் ஆய்வுசெய்தது. இதைத் தொடர்ந்து இன்று அளித்த தீர்ப்பில், ".ராஜா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. எனவே, அவர் தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது" என ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comment


TOP