No icon

கூடா நட்பு கேடாய் முடியும்! நம்புகின்றாயா?

கல்வி திசையெட்டும் எட்டட்டும்!

காட்டில் வாழும் ஒட்டகம் ஒன்றை கண்ட நரி அதனோடு நட்பு பாராட்டியது. இருவரும் நண்பர்களாகப் பழகினார்கள். ‘நண்பா! ஆற்றின் அக்கரையில் கரும்புத் தோட்டம் ஒன்று உள்ளது.  போகலாமா? என்று கேட்டது நரி. ஒட்டகமும் கரும்பு சாப்பிட ஆசைப்பட்டது. நரியை முதுகில் சுமந்தபடி இனிப்பான கரும்பை சுவைத்து உண்டு வயிறு நிரம்பியதும் நரி புறப்பட ஆயத்தமானது. இன்னும் கொஞ்ச நேரம் கூட சாப்பிடுவோம் என்றது ஒட்டகம்.
அப்போது திடீரென நரி ஊளையிடத் தொடங்கியது. ‘வாயை மூடு, யாராவது வந்துவிட்டால் நமக்கு ஆபத்தாகி விடும்‘ என்று ஒட்டகம் எச்சரித்தது. அதைக் கேட்காமல் நரி மீண்டும் ஊளையிட ஆரம்பித்தது. தோட்டத்துக் காவலர்கள் கம்புகளுடன் உள்ளே ஓடி வந்தார்கள். நரி வளைக்குள் ஒளிந்து கொண்டது. ஒட்டகம் மாட்டிக் கொண்டது. காவலர்கள் அதை நையப் புடைத்து விரட்டினார்கள். 
நரி நம்மை மாட்டிவிட்டது. இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணியது ஒட்டகம். திரும்பச் செல்லும்போது ஒட்டகத்தின் முதுகில் ஏறிக்கொண்டது நரி. ஏறியதும் ‘அடி பலமாகப் பட்டு விட்டதா?’ என்று விசாரித்தது நரி. நடு ஆற்றுக்குள் செல்லும்போது அதுவரை அமைதியாக வந்த ஒட்டகம் நீரில் மூழ்கியது. நரி பயத்தால் கத்தியது. நரியாரே! நன்றாக சாப்பிட்டால் உமக்கு ஊளையிடத் தோன்றியதைப் போன்று எனக்கு நீரில் மூழ்கி எழத் தோன்றுகிறது என்றதாம். தவற்றை உணர்ந்த நரி ஒட்டகத்திடம் மன்னிப்பு கேட்டதாக அக்கதை முடியும்.
நடைமுறையில் மனிதர்களான நம்மில் பெரும்பான்மையோர் இழைத்த தீமைக்காக, கெடுத்த காரணத்துக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை. மாறாக பழி வாங்கும் படலங்கள் தொடரும். எந்தவித தவற்றையும் செய்யாதவர்களே மோகமான நண்பர்களால் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மோசமான நண்பர்களால் தான் மட்டுமல்ல, தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் கூட கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைவார்கள். 
இன்று குழந்தைப் பருவத்தினரை மட்டுமல்ல, வளரிளம் வாலிப வயதினரையும்கூட பெற்றோர் பொத்திப் பொத்தி வளர்க்க முயல்கின்றார்கள். மோசமான நண்பர்களோடு தன் மகன்(ள்) சேர்ந்து கெட்டுப்போய் விடக் கூடாது என்பதே இதற்கு காரணம். சரியான நட்பு அமையாவிட்டால் கூடை யிலிருந்து வெளிவரவிடாமல் உள்ளே இழுத்து விடும் நண்பர்களைப்போல மோசமான  நண்பர்களின் சகவாசமும் இருக்கும்.
நண்டுகளுக்கு ஒரு இயல்பு உண்டு. கூடை யிலிருந்து வெளியே போக விரும்பும் நண்டை மற்ற நண்டுகள் வெளியேற விடா
மல் உள்ளே இழுத்து போட்டுவிடுமாம். தானும் வெளியேறாது; பிற நண்டு களையும் வெளியே விடாது. கெட்ட நண்பர்களும் இப் படியே இருப்பார்கள்.
பெரும்பாலும் கஞ்சா,
போதைப் பொருள்கள், மது
பானங்கள் போன்றவற்றுக் குப் பெண்களை தரக்குறை வாக விமர்சித்தல், தேவைக்கு செய்வதும்; சமூக விரோத செயல்களில் படிப்படியாக ஈடுபடுவதும் கெட்ட நண்பர் களின் பழக்கமாக உருவாகி வழக்கமாக மாறி இயல்பாக நிலைத்து விடும்.
எந்த மோசமான நட வடிக்கையையும் தனியாக அல்ல! கூட்டாகவே செய் வார்கள். கூட்டத்தில்  இருந்து
ஒருவன் பிரிந்து வெளியேற விரும்பினால் கூட கூடைக்
குள் கிடக்கும் நண்டுகள் வெளியேற விரும்பும் நண்டை உள்ளே இழுத்து விடுவதைப்போல, அவனை அக்கூட்டத்திலிருந்து வெளியேற விடமாட்டார்கள். ஒரு சில நல்லவர்கள் கூட
தெரியாமல் மாட்டிக் கொண்ட
தால் வெளியேற முடியா மல் கெட்டவர்களாக மாறிய துண்டு.
வாழ்வில் முன்னேற வேண்டும், மதிப்பாக வாழ வேண்டும், திரும்பிப் பார்க்
கும்படி புதுமைகளைப் படைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நண்பர்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ‘உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று நான் சொல்கிறேன்‘ என்ற வாசகம் இதை நிரூபிக்கும். ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட நண்பர்களை மக்கள் அடையாளப்படுத்துவர்.
பள்ளிப் பருவம் முடியும் முன்பே ஆரம்ப மாகும் சில மோசமான உறவுகள் வாலிப வயதிலும், அதைத் தொடர்ந்தும் நீடிப்பதைக் காண முடியும். பெற்றோரால் தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட, தண்டிக்க, திருத்த முடியாத நிலைக்கு அதாவது தங்களது கட்டுப்பாட்டை மீறிப் போகும்போது கையை மிஞ்சி விட்டது என்று கண்ணீர் வடிப்பர்.
இப்படிப்பட்டவர்களைத்தான் உலகம் தண்டிக்கத் தொடங்கும்.
“தாயும், தந்தையும் கற்றுத் தராதவருக்கு உலகம் கற்றுத்தாரும்" என்ற பொன்மொழி ஒன்று உண்டு.
உலகுக்கு ஒரு இயல்பு உண்டு. இயற்கையின் விதிக்கு கட்டுப்படுவது அது. இயற்கையின் விதி மனிதன் நினைப்பதைப்போல் இராது. வெளிப்படையாக வெளிப்படுத்தும். வந்தபின்பு ஏன் இப்படி நிகழ்ந்தது. இடம் மீதோ, பொருள் மீதோ, உயிர் மீதோ அதற்கு அக்கரை இல்லை. எல்லாவற்றையும் ஒன்றுபோல் பாவிக்கும். முரண்பாடுகள் உருவாகும்போது தனக்கே உரிய விதத்தில் சமன்படுத்தி இயல்புக்குத் திரும்பும்.
நம் பெற்றோர் அப்படி அல்ல. நம்மீது தனிப்பட்ட அக்கரை உடையவர்கள். வெளியே தெரியாதவாறு திருத்த முயற்சிப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் கண்டிப்பார்கள், சுட்டிக் காட்டுவார்கள், முகம் சுழிக்கும்படி வாழும் நண்பர்களோடு சேர்வதைக் கண்டால் அதட்டுவார்கள். இவை அத்தனையும் கூடாதே என்ற அக்கரையாலும், ஆதங்கத்தாலும்தான் என்பதை மாணவர்கள் படிக்கும் வயதில் புரிநது கொள்ள வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் பெற் றோருக்குக் கட்டுப் படும் குழந்தைகள், வளரிளம் பருவத் தைக் கடக்கும் முன்பே
பெற்றோர் அறிவுரை
களையும் ஆலோ சனைகளையும் வழங்கும்போது அனைத்தும் எங்களுக்குத் தெரியும் என்பதைப் போல புருவத்தை உயர்த்துவதைக் காண முடியும். அதிலும் குறிப்பாக நண்பர்களைப் பற்றி பேசினால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நல்ல நண்பர்களோடு சேர்ந்தால் பெற்றோர் கண்டிக்கமாட்டார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் மீது வேறு எவருக்கும் இல்லாத அக்கரை அவர்களுக்கு உண்டு. மாணவர்களே! இதை நம்புங்கள். அவர்கள் சொல்லும் விதம் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் இல்லாமல் இருக்கலாம்.
உண்மையான நட்பும், நல்ல நட்பும் எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வோர் அற நூலும் கற்பிக்கின்றது. பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் தலையாய நட்பு பற்றி பின்வருமாறு கூறுகின்றது. கடையாயர் நட்பில் கழுகு அனையர், ஏனை இடையாயார் தெங்கின் அனையர், தலையாயார் எண்ண அரும் பெண்மைபோன்று, இட்டஞான்று இட்டதே, தொன்மை உடையார் தொடர்பு.
நட்புத் தன்மையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பாக்கு மரத்தைப் போன்றவர்கள். தினந்தோறும் நீர்ப்பாய்ச்சினால்தான் பாக்குமரம் காய்தரும். இதைப்போல சில நண்பர்கள் நாள் தோறும் உதவிகள் செய்தால்தான் அருகில் இருப்
பார்கள். இடை ஆயவர் விட்டுவிட்டு நீர்பாய்ச்சி கவனித்துக் கொள்ளும் தென்னை மரத்தைப் போன்றவர்கள். இவர்களது நட்பைப் பெற அவ்வப் போது உதவிகள் செய்யவேண்டும். ஆனால் விதையிட்ட நாளில் தண்ணீர் விட்டு வளர்ந்த பின்பு பராமரிப்பு செய்யாமலே உதவும் பனைமரம் போல தலையாய நட்பு இருக்கும்.
இந்தத் தலையாய நட்புதான் நல்ல நட்பு. “ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்கிறது ஓர் ஆங்கில
முதுமொழி. மாணவனே! உனக்கான நல்ல நண்பனை உன்னாலும் அடையாளம் காண முடியும். தக்க வைத்துக் கொள். யார் அந்த நல்ல நண்பன்?
நீ இருக்கும் நிலையை விட வளர உனக்கு உதவுபவன் நல்ல நண்பன்.
நீ தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுபவன் நல்ல நண்பன்.
நீ தலைவராகும்போது மகிழ்ச்சி அடைவது நல்ல நண்பன்.
நீ பரிசு பெறும்போது முதுகில் தட்டுபவன்தான்
 நல்ல நண்பன்.
(தொடரும்)

Comment