No icon

ஒருமைப்பாடு எனும் நற்பண்பு

ஒருமைப்பாடு எனும் நற்பண்பு
ஜூலை மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் மாதத்தில் தன் புதன் மறைக் கல்வியுரையில், தற்போதைய கொள்ளை நோய், இவ்வுலகில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்து தன் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளத் துவங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 2 ஆம் தேதி, புதனன்று, இக்காலத்தில், நம்மிடையே விளங்க வேண்டிய ஒருமைப்பாட்டின் அவசியம் குறித்து எடுத்தியம்பினார்.

மார்ச் 7 ஆம் தேதியன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில், வழங்கிய புதன் மறைக்கல்வியுரையின்போது, விசுவாசிகளை
நேரடியாக சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோயின் கட்டுப்பாட்டுகளையொட்டி, தன் நூலகத்திலிருந்தே அதன் பின், மறைக்கல்வி உரைகளை, காணொளி வழியாக  வழங்கிக் கொண்டிருந்தார். தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்புதனன்று, அதாவது, 189 நாட்களுக்குப்பின், வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (ளுயn னுயஅயளடி) வளாகத்தில், முதன் முறையாக, திருப்பயணிகளை நேரடியாக சந்தித்த திருத்தந்தை, தன் எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

"அன்பு சகோதரர், சகோதரிகளே, தற்போதைய கொள்ளை நோய் குறித்த நம் சிந்தனைப் பகிர்வுகளில், இறைவனால் படைக்கப்பட்ட, பொதுவான இல்லத்தை, பகிர்ந்து வாழ்ந்து வரும் நாம், எவ்வாறு ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு இறுக்கமாக பிணைக்கப் பட்டுள்ளோம் என்பதையும்  குறித்து கடந்த வாரங்களில் கண்டோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால்தான், இன்றைய நெருக்கடிச் சூழல்களிலிருந்து வலிமையுடன் வெளியேற முடியும். இவ்வாறே, ஒருமைப்பாடு எனும் நற்பண்பு குறித்து, திருஅவையின் சமூகக்கோட்பாடும் எடுத்துரைக்கிறது. உண்மை ஒருமைப்பாடு என்பது, மற்றவர்களுக்கு உதவியை வழங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக, அது, நீதியோடு தொடர்புடையது. சமூக நலன் குறித்த நம் எண்ண ஓட்டத்தில் மிகப் பெரும் மாற்றத்தை இது எதிர்பார்க்கிறது. மேலும், இது அனைவரின் வாழும் உரிமையை பாதுகாப்பதோடு, உலகின் பொருட்களை நீதியுடன் அனைவரோடும் பகிர்வதை ஊக்குவிப்பதாகும். பாபேல்
கோபுரம் குறித்த விவிலிய நிகழ்வு நமக்கு இதனை அழகாக எடுத்துரைக்கிறது. கடவுளைக் கைவிட்ட ஒரு சமுதாயம், ஏழைகளுடன் ஒருமைப்பாட்டை இழந்து, உறவுகளைவிட பொருட்களை பெரிதாக மதித்து, தன் வழியில், வானத்தை நோக்கிய ஒரு பாதையைக் கட்டியெழுப்ப முயலும்போது, என்ன நடக்கும் என்பதை பாபேல் கோபுர நிகழ்வில் காண்கிறோம். அழிவுதரும் இந்த பாபேல் நோய்க்குறி, பெந்தகோஸ்தே நிகழ்வால் மாற்றப்படுவதையும் காண்கிறோம். பெந்தகோஸ்தே நிகழ்வின் போது, சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கென, பன்மைத்தன்மையில் இணக்கமான ஒன்றிப்பை தூய ஆவியாரின் கொடை உருவாக்கியதையும் காண்கிறோம். கோவிட் நோய்க் காலத்திலிருந்து மீண்டுவரும் உலகில், இத்தகைய ஒருமைப்பாட்டுணர்வை கண்டுகொள்ள தேவையான ஞானத்தையும், படைப்பாற்றலையும் தூய ஆவியார் நமக்கு வழங்குவாராக. இதன் வழியாக நாம் சமூகத் தீமைகளையும், நமக்கிடையே காணப்படும் தீமைகளையும், குணப்படுத்தவும், மனிதகுல குடும்பம் சகோதரத்துவத்திலும், நீதியிலும், அமைதியிலும் வளரவும் உதவுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், மற்றும், நோயுற்றோருக்காக செபித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

புறணிபேசுதல் கோவிட்-19
தொற்றுக்கிருமியைவிட மோசமானது

உடன்பிறந்த உணர்வுடன் மேற்கொள்ளப்படும் குறைதிருத் தம், திருஅவையைக் கட்டியெழுப் பும்; மாறாக, புறணிபேசுதல், அதைத் தகர்த்தெறியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 06 ஆம் தேதி ஞாயிறு, மூவேளை செப உரையில், திருஅவை குழுமத்தின் உறுப்பினர் களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

வத்திக்கான் தூய பேதுருவளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில், கூடியிருந்த மக்களுக்கு, உடன்பிறப்புக்களுக்கிடையே நிலவும் குறைதிருத்தம் பற்றிக் கூறும்  அந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.18:15-20) மையப்படுத்தி உரையாற்றிய திருத் தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த நற்செய்தி பகுதி, கிறிஸ்தவ வாழ்வின் இரு கூறுகள் பற்றி சிந்திப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

முதலாவது, குழுமத்தில் ஒன்றிப்பைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது, இரண்டாவது, தனிப்பட்ட வாழ்வைச் சார்ந்தது, அதாவது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் மனச் சான்றின் மீது கவனம் செலுத்தவும் மதிக்கவும் வலியுறுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு, பாவம்புரிந்த நம் சகோதரர் அல்லது சகோதரியைத் திருத்துவதற்கு, மூன்று படிமுறைகளை நமக்கு வழங்குகின்றார் என்று கூறினார்.

படிமுறை 1: விவேகத்துடன் எச்சரிக்கை விடுத்தல்
பாவம்புரிந்த சகோதரர் ஒருவரைத் தீர்ப்பிடாமல், அவர் தன் தவறை உணர உதவி
செய்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த முதல் முயற்சியை மேற்கொள்வது எளிதல்ல, ஏனென்றால், அந்தச் சகோதரர், நாம் சொல்வதற்கு எதிர்மாறாகச் செயல்படலாம்; சில நேரங்களில், அவர் மீது நமக்குப் போதுமான நம்பிக்கை இல்லாதிருக்கலாம். அல்லது, வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று விளக்கினார்.  

படிமுறை 2: உதவி கேட்பது
பாவம்புரிந்த அந்த சகோ
தரர் மனம் வருந்தாதபோது, நாம் மற்ற சகோதரர் சகோதரிகளின் உதவியை நாடவேண்டும் என்றுஇயேசு கூறுகிறார் என்று விளக்கியதிருத்தந்தை,  இந்த இரண்டாவது முயற்சி, மோசே சட்ட விதிகளிலிருந்து மாறுபட்டது, ஏனென்றால், யாரையாவது தீர்ப்பிடவேண்டும் எனில், இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் தேவைஎன்று மோசே சட்டம் கூறுகிறதுஎன்றும், இயேசு பரிந்துரைக்கும் இரு சாட்சிகள், குற்றம் சுமத்தவும்,தீர்ப்பிடவும் அல்ல. மாறாக, உதவிசெய்ய அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.படிமுறை

3: திருஅவையிடம் கூறுதல்யாராவது தான் செய்த குற்றத்தில் உறுதியாய் இருந் தால், அந்த விவகாரத்தை திரு அவையிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சகோதரர் சகோதரிகள் மீது நல்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள் உள்ளன என்றும், தவறிழைத்த ஓர் உடன்பிறப்பை புதிய நிலைக்குக் கொண்டுவர, மிகுந்த அன்பு தேவை என்றும் கூறினார்.

இறுதி முயற்சி
சில நேரங்களில் திருஅவையின் தலையீடும் தோல்வியடையலாம்; அவ்வேளையில், அந்த மனிதர் அந்நியராக, புறவினத்தார் போன்று நடத்தப்பட வேண்டும் என்று இயேசு உரைக் கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு நடத்துவது, அந்த மனிதரை இழிவுபடுத்துவதாக இருக்கலாம், உண்மை யில், இத்தகைய கடும் நடவடிக்கையின்போது, அந்தச் சகோதரரை கடவுளின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும், ஏனென்றால், மற்ற அனைத்துசகோதரர் சகோதரிகள் காட்டும் அன்பைவிட மிகப்பெரும் அன்பைக் காட்டவல்லவர், இறைத்தந்தை ஒருவர் மட்டுமே என்று எடுத்துரைத்தார்.புறணிபேசுதல் குழுமத்தை புண்படுத்துகிறதுகுழுமத்தில், குற்றம்புரிந்த உறுப்பினர் ஒருவரை, உடன்பிறந்த உணர்வுடன் திருத்தும் பாதையைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அவரைப் பற்றி புறணிபேசுகையில், அது அந்த குழுமத்தின் ஒற்றுமையை புண்படுத்துகிறது, ஏனென்றால், சாத்தானே, மாபெரும் புறங்கூறுபவர் என்று திருத்தந்தை கூறினார்.

புறணிபேசுதல் கோவிட்-19 தொற்றுக்கிருமியை விட மோசமானது, எனவே புறணிபேசாமல் இருப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வுடன் குறைகளைத் திருத்து வதற்கு, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்று சொல்லி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

2023 ஆம் ஆண்டு உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் திட்டம்
போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில், 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் திட்டமிட, அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் தங்கள் கூட்டத்தை நடத்தினர். இந்த இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், லிஸ்பன் துணை ஆயர் அமெரிக்கோ மனுவேல் ஆல்வ்ஸ்  அவர்கள், செப்டம்பர் 2 ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித தமாசோ திறந்தவெளி அரங்கில் நடத்திய புதன் மறைக்கல்வி உரைக்குப்பின், அவரை நேரில் சந்தித்து, அவரிடம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளைக் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டதாக இக்கூட்டத்தின் துவக்கத்தில் கூறினார்.

இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் ஏற்பாடுகளைக் குறித்து செவிமடுத்த திருத்தந்தை, இந்த முயற்சிக்கு தன் இறைவேண்டுதல்களை வழங்குவதாகவும், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில் அனைவரையும் இணைக்கும் கண்ணோட்டம் முக்கிய இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் ஆயர் மனுவேல் ஆல்வ்ஸ் அவர்கள் கூறினார். 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், கோவிட் 19 கொள்ளைநோய் பரவலின் காரணமாக, தற்போதைக்கு 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவருகிறது - திருத்தந்தையின் சுற்றுமடல் 
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிஸ் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், மனித உடன்பிறந்த நிலை மற்றும், சமுதாய நட்புறவு பற்றிய “அனைவரும் உடன்பிறப்புகள் (குசயவநடடi வரவவi)” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள திருமடல் ஒன்றில் கையெழுத்திடுவார். இதனை அறிவித்த திருப்பீடத் தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

(வழக்கம்போல்  தமிழகத் திருஅவைக்கு மிகவும் தரமான முறையில் எல்லாருக்கும் புரியும்படி இச்சுற்றுமடலை தமிழாக்கம் செய்து, குறைந்த விலையில் மிக விரைவாக நம் வாழ்வு வெளியிடும் காத்திருங்கள். கிறிஸ்து வாழ்கிறார் என்ற திருத்தூது ஊக்கவுரையை வாங்கி வாசித்து மகிழ்ந்தது போல இதனையும் வாசித்து மகிழ்ந்திடுங்கள்)

Comment