No icon

கொடூர நாள் மே 22

ஜாலியன்வாலாபாக் கொடூர நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாழடித்து வந்த ஸ்டெர்லைட்டைத் தடைசெய்யக் கோரி மக்களின் அமைதிப் பேரணியைக் குலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கதறக் கதறக் கொன்று குவித்த உலகமனைத்திலுமுள்ள தமிழர்களை மட்டுமல்லாத உலக மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த நாள் வரும் தலைமுறையும் இப்போதுள்ள தலைமுறையும் மறக்க முடியாத நாள் மே 22. 
தூத்துக்குடி பனிமயப் பேராலய அலுவலகத்தின் முன்பு
கூடிய தன்னெழுச்சிப் பொதுமக் களை, சாதி, மத வேறுபாடின்றி கூடிய இளையோர் முதல் முதி யோர் வரை உள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கெதிரான ஆர்வலர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்த முயற்சி செய்தது காவல் துறை. ஆனால் பின்வாசல் வழி யாக ஊர்வலத்தில் அனைவரும் வேக உணர்வோடு செல்லத் தொடங்கினர். தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் அருகே மறித்த 50க்கும்மேற்பட்ட காவலர்
களுடன் சமாதானம் பேசி தடுப்பு
களைத் தாண்டி மனு அளிப்பதி லேயே நோக்கமாகக் கொண்டு ஊர்வலத்தைத் தொடர்ந்தனர். இதே போல மடத்தூரில் தடுப்புகளை அமைத்து மக்களை ஊர்வலத்தில் பங்கேற்கவிடாமல்  தடுத்தனர்.
ஆங்காங்கே மக்கள் ஆர்வத்துடன் ஊர்வலத்தில் இணைந்து கொண்டே
இருக்க விவிடி சிக்னல் அருகே காவல்துறை தடியடி நடத்த சிதறி
ஒடிய மக்கள் காவலர்கள்மீது, கல்வீச, வ.உ.சி கல்லூரியை நெருங்கும்போது ஆயிரக்கணக் கான மக்கள் திரள பைபாஸ் பாலத்தின் கீழும், பைபாஸ் சாலை யிலும் திரண்டு மாவட்ட ஆட்சியர் அடையும் முன் துப்பாக்கிச் சத்தம் கேட்க அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள் திரள், தூத்துக்குடி மாநகரை நோக்கித் திரும்பி அந்த துயர வேளையில், கொலைவெறித் தாக்குதல் முடிவுக்கு வந்தது. ஸ்பைனர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தொலைக்காட்சி ஊடகத்தில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 13 உயிர்கள் படு
கொலையால் துடித்து மடிந்தனர். சுட்டுக் கொல்லப்
பட்ட அனைவருக்கும் தலையிலும், மார்பிலும் மட்டுமே குண்டுகள் பாய்ந்திருந்தன. ஏராள மானோர் படுகாயம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தூத்துக்குடி ஆட்சியர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இல்லை. பன்னாட்டு தனியார் ஆலையான ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட
இன்னும் மத்திய, மாநில அரசுக்கு மனம் வரவில்லை. இன்றும் சட்டப் போராட்டம் தொடர்கிறது. பனிமயத் தாய் வசிக்கும் தூத்துக்குடி மண்ணில் செந்நீர் சிந்திய செம்மல்களின் மரண ஒலம் இதற்குக் காரணமானவர்களுக்குப்  பனிமயத் தாய் விரைவில் நீதி வழங்குவாள். பார்புகழ் பனிமயத்தாயின் பூமியில் நடந்த நிகழ்வுக்கு யார் யார் காரணமோ அவர்களை எல்லாம் நீதியின் பார்வையால் அன்னை நிச்சயம் பதில் தருவாள். தினசரி விவிலியம் வாசிக்கும்போது லூக்கா நற்செய்தி அதிகாரம் 2, இறைத் திருவார்த்தைகள் 47 முதல் 55 முடிய உள்ளவற்றை வாசிப்பதுதான் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

Comment