No icon

குடந்தை ஞானி

கொண்டாடப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மகளீர் உரிமை துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்மாநில சிறுபான்மையினர் ஆணைத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முன்னிலை வகித்து, அனைவரையும் வரவேற்றார்மேலும் எம்.பிக்கள் தமிழச்சி  தங்கபாண்டியன், கே. நவாஸ் கனி ஆகியோரும்  எம்.எல்.ஏக்கள் எம்.எச். ஜவாஹிருல்லா, இனிகோ இருதயராஜ், எஸ். ராஜேஷ் குமார், ஆளூர் ஷா நாவாஸ், . வேலு ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரச முதன்மைச் செயலாளர் . கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாசீர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களும் பொதுமக்கள் அனைவரும் சிறுபான்மையினர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் சிறுபான்மையினர் உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். சிறுபான்மையினர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை  அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அவர்கள்முன் மொழிந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மிகச் சிறப்பான முறையில் முதல் முறையாக இவ்விழா கொண்டாடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மாண்புமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், ஆணைய உறுப்பினர்களோடு இணைந்து, மிகச் சிறப்பான முறையில் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment