No icon

அருள்பணி. ம. டைட்டஸ் மோகன்

விண்ணிலிருந்து ஒரு கடிதம்!

அன்புள்ள...,

நலம். உன் நலம் அறிய ஆவல்! இப்படி வழக்கமான முறையில் நலம் விசாரித்து கடிதத்தை ஆரம்பிக்க என்னால் முடியவில்லை. எல்லாரும் நலமாக இல்லாதபோது நான் மட்டும் எப்படி நலமாக இருக்கமுடியும்? அங்ஙனமே, தெரிந்துவைத்துக்கொண்டே நீ நலமா? என்று உன்னை விசாரிக்கவும் என்னால் இயலவில்லை. காரணம், கொரோனா திரிபான ஒமைக்ரான் மீண்டும் பேரிடரை விளைவிக்குமா என்கிற ஐயப்பாட்டில் நீ நகர்ந்து கொண்டிருக்கிறாய். எதுவாயினும், விழாக்காலம் பெயரில் கொரோனா பாதுகாப்பு கவசங்களைக் களைந்துவிடுதல் ஆரோக்கியமல்ல. முகக்கவசம் அணிதல் துவங்கி, சமூக இடைவெளி, கிருமிநாசினி மூலம் சுகாதாரம் பேணுதல், பெருங்கூட்டங்களைத் தவிர்த்தல் போன்றவற்றை தொடர்வது உனக்குப் பாதுகாப்புத்தரும். எனது பிறப்பைக் கொண்டாட உனது இருப்பை உறுதிசெய்வது அவசியம் என்பதனை மறந்து விடாதே!

டிசம்பர் 25 - உனக்கெப்படி?

இந்நாளுக்காக உலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. என் பிறப்பு விழாவிற்காய் நீ எடுக்கும் தயாரிப்புகளைப் பார்த்து உன்னைப் பாராட்டுவதா? அல்லது விமர்சனப்படுத்தவாநீ மேற்கொள்ளும் செயல்பாடுகளை பாசத்தின் வெளிப்பாடு என்பதா? இல்லை பாசாங்கின் பரிணாமம் என்பதா? அன்பின் அர்த்தம் என்பதா? இல்லை ஆடம்பரத்தின் உச்சம் என்பதா? ஆடம்பரக் குடில்கள், வண்ணஅலங்கார விளக்குகள், வீதியெங்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள், வியாபாரச் சந்தையில் வலம்வரும் புது வரவுகள். வத்திக்கான் துவங்கி வாடிவிளைவரை உலகமெங்கும் இப்படித்தான். இங்கு தான் எனக்கு அச்சமே வருகிறது. கொண்டாட்டம் ஒருபுறமெனில் தொடரும் திண்டாட்டம் மறுபுறம். வீண்செலவுகள் ஒருகணம் எனில் ஏதுமின்றி பலரது விழிபிதுங்கும் தருணங்கள் மறுகணம். கொண்டாட்டங்கள் அவசியம்தான். ஆனால், திண்டாடும்  மக்களை உடன் வைத்துக் கொண்டாடுவதோ அல்லது மாற்றங்கள் ஏற்படுத்தா கொண்டாட்டங்களாலோ என்ன பயன்? என்பதே என் கேள்வி. எனது பிறப்பு விழாவைக் கொண்டாட நீ எடுக்கும் தேவையற்ற வீண் முயற்சிகளையும் அதற்காக நீ செலவிடும் நேரங்களையும், செல்வங்களையும் என்னால் ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது.

நல்லச்செய்தி நற்செய்தி; போலிச் செய்தி வியாபாரச் செய்தியே :நான் பிறந்தபோது என்ன செய்தி உலகிற்கு சொல்லப்பட்டது என்பதை நீ நன்கு அறிவாய். அதை அடிக்கடி உனக்கு மதப்போதகர்கள் நினைவூட்ட தவறுவதில்லை என்பதை நான் அறிவேன். “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்...” (லூக் 2:10-12). பார்த்தாயா! எனது பிறப்பின் செய்தியே மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. நல்ல செய்திகளுக்கு இன்று பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. எத்திசையிலும் வன்மச்செய்திகளும், வசவு வார்த்தைகளும் வலம் வருகின்றன. அதற்கு ஊடகங்களும் உனக்கு உதவிக்கரமாய் அமைகின்றன.

உதாரணத்திற்கு, பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என்று வாட்ஸப்பில் பரவிய வதந்தியால் மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு மாதத்திற்குள்ளே 14 கலவரங்கள் ஏற்பட்டன. மாடுகளைக் கடத்துகிறார் என்ற வதந்தியால் பெஹ்லுகான் அடித்தே கொல்லப்பட்டார். பொய்ச் செய்திகளை ஆராயும் ஓர் ஆய்வகம் இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் 260 போலி ஊடகத்தளங்கள் 65 நாடுகளில் வியாபித்திருப்பதாகச் சொல்கிறது. சமீபத்திய வங்க தேர்தலின் போது, பகிரப்பட்ட செய்திகளில் 40 விழுக்காடு பதிவுகள் பொய்கள் என்று பேஸ்புக் கண்டறிந்துள்ளது. ஒருவரின் பொய்ப் பெயர் (குயமந ஐன) பதிவு 30 மில்லியன் லைக் பெற்றிருக்கிறதாம். இதுவெல்லாம் உனக்குத் தெரியுமா? போலிச்செய்திகளைப் பரப்புவதில் உனக்கு பங்குஉண்டா என்று சுய ஆய்வு செய்துபார். நன்மை தீமை அறியாமலே நீ பகிரும் முகநூல் செய்திகள் முதல், முகம் பார்க்கும் அண்டை வீட்டு ஆசாமியைக் கெடுத்துப்பகிரும் வார்த்தைகளும் கெட்டச் செய்திகளே என்பதனை உணர்வாயா?

ஏழைகள் ஏற்றம் பெறவே; பகிர்வதால் மாற்றம் மலரவே:இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்”. இச்செய்தி முதலில்  ஆட்டிடையர்களுக்கு கொடுக்கப்பட்டது உனக்கு தெரியும். எனது பிறப்பின் முதற்சாட்சிகளே ஏழைகளான, பாண்டியத்துவம் இல்லாத பாமரர்களே! பெத்லகேமில் நான் பிறந்தேன்எபிரேயத்தில்பெத்என்றால் வீடு, ‘லகேம்என்றால் ரொட்டி. ‘அப்ப வீடுஎன்று பொருள்படும் இடத்தில் நான் பிறந்தது இந்த உலகை உண்பிப்பதற்கே. நான் பிறந்தவுடன் என்னை தீவனத் தொட்டியில் கிடத்தினார்கள் (லூக் 2:7) என்பதும், உனக்கு நன்கு தெரியும். கால்நடைகளுக்கு வைக்கோல், புல், தவிடு ஆகியவற்றைப் போட்டு, உண்ணத் தருகின்ற கருவி தீவனத்தொட்டிஇந்த உலகை உண்பிக்க என்னை நான் தீவனத்தொட்டியில் தருவதுதானே சரி. பஞ்சுமெத்தை, வெல்வெட் துணிகளெல்லாம் வைத்து நான்  பிறக்க உன் குடிலில் இடம் தயார் செய்கிறாய். குளிரில் ஆடையின்றி வாடுவோரைக் கண்டும் காணாமல் கடந்துவிடுகிறாய். இச்சூழலில் நீ அமைக்கும் பஞ்சுமெத்தையில் எனக்கு எப்படி தூக்கம் வரும்? துக்கம் தான் வருகிறது.

உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழைமக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர் என்கிறது ஆக்ஸ்போர்டின் பலபரிமாண வறுமை குறியீடு (ஆஞஐ - 2014). இந்த ஏழைகளின் சிரிப்பில் அன்றாடம் பிறக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடிலுக்காய் நீ எவ்வளவு தொகை செலவு செய்கிறாய் என்று நினைத்துப் பார்பல ஆயிரங்கள், இலட்சங்கள் செலவு செய்து, நீ எழுப்பும் கிறிஸ்மஸ் குடில்கள், ஆடம்பரங்கள், உன் கிராமத்திலுள்ள எத்தனைக் குடிசைகள் நிமிர வழிகாட்ட முடியும்யோசிப்பாயாஎத்தகைய மனநிலையோடு குடில்களைக் கட்டுகிறாய்பக்கத்து ஊரைவிட, அடுத்தத் தெருவைவிட அண்டை வீட்டைவிட உசத்தியாக இருக்க வேண்டுமென்று போட்டிப்போட்டுக் கொண்டு நீ கட்டியெழுப்பும் குடில்களின் கோபுரங்களில் இருப்பது உன் ஆணவமும் பொறாமைக் குணமும்தானேஇத்தனை ஸ்டார் கட்டினார்கள், இத்தனை மின்விளக்குகள் ஒளிர்ந்தன என்று எல்லாரும் மெச்சவேண்டுமென்று நினைத்து செயல்படுகிறாய். உன் ஊரில் எத்தனையோ குடிசைகள் மின்சார வசதியற்று இருளில் தூங்கிக் கொண்டிருக்கிறதே அவற்றை அகற்ற ஏதாவது முயற்சி செய்தாயா? இன்று எனது உடலாய் உருவாய் நீதான் இந்த உலகில் வலம் வருகிறாய். உனது கரங்கள் வழியாகத்தான் நான் தத்தளிப்பவர்களுக்கு கரம் கொடுக்க முடியும் என்பதனை உணர்ந்து செயல்படுவாயா?

பாதுகாப்பு உறுதி பெறணும்; வாழ்வு வளர்க்கப்படணும் : எனது பிறப்புச் செய்தியைக் கேட்டதும் ஏரோது அரசனும் அவனோடு சேர்ந்து எருசலேம் முழுவதும் கலங்கிற்று (மத் 2:3). என்னைக் கொல்லும் நோக்கிலே பெத்லகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் அவன் கொன்றான். நீ வாழும் இவ்வுலகில் இன்றும் ஏரோதுகள் குறைந்தபாடில்லை என்பதை நீ அறிவாயா? தினமும் புதுப்புது ஏரோதுகள், பல வடிவங்களில் படையெடுத்து, உனது வாழ்வை சீரழிப்பது குறித்து நீ எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டாமா?

ஒவ்வொருநாளும் நான் பிறந்து கொண்டிருப்பதையும், ஏரோதுகள் கையில் சிக்கிவிடாமல் மாண்புடன் வாழ துடித்துக் கொண்டிருப்பதையும் நீ கண்டுகொள்ளாமல் கடப்பதை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.இந்தியாவில் ஒவ்வொருநாளும் 350க்கும் மேற்பட்ட குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடப்பதாகவும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் குறிப்பாக 51 விழுக்காடு குழந்தைகள் பாலியல் தொந்தரவால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இது 250 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. அங்ஙனமே இந்தியாவில் ஒவ்வொருநாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்கும் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக .நா. கூறுகிறது. இந்த இழிநிலையை அகற்றாமல் நீ எனக்கு பிறந்தநாள் கொண்டாடி என்ன பயன்? பெண் குழந்தைகளின் வாழ்விற்கு பாதுகாப்பு அரணாய் உனது செயல்பாடுகள் அமையுமா?

இயற்கைப்பேணப்படணும்; செயல்பாடுகள் மாற்றம் பெறணும் : டில்லியில் தொடர்ந்து மூச்சுத்திணறல். தீபாவளி பண்டிகைக்காக வெடிக்கப்பட்ட பட்டாசுகளும் ஒரு காரணம். கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நீ எரியவிடும் வண்ணவிளக்குகளால் புவிவெப்பமாகிறது. வெடிக்கும் பட்டாசுகளால் பூமித்தாயின் மூச்சுக்காற்று நாசமடைகிறது என்பது உனக்கு தெரியாதா என்ன? உனக்காகத்தானே இன்று இளஞ்சிட்டுகள் உலகளாவிய மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். ஆனாலும், இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?” என்று 2019 இல் நியூயார்க்கில் நடைபெற்ற .நா. காலநிலை உச்சி மாநாட்டில் உணர்ச்சி பொங்க சிறுமி கிரெட்டாதுன்பெர்க், பொங்கி எழுந்தது உனக்கு நினைவிருக்கா? சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி வினிஷா, “நான் இந்தியாவின் மகள் மட்டுமல்ல; இந்தப் பூவுலகின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். புதைபடிவ எரிபொருள், புகை, மாசுபாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளியலை விட்டொழியுங்கள். உலகத் தலைவர்கள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகள், பலன் தராத பேச்சுகளைக் கண்டு இளைய தலைமுறை கோபமும் விரக்தியும் அடைந்துள்ளது. வாழத் தகுந்த ஓர் உலகில் நாம் வாழவேண்டுமானால், வாக்குறுதிகளைவிட, செயல்பாடே இப்போது அவசியமாகிறதுஎன்று மோடி உட்பட பல நாட்டுத்தலைவர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தில் முழங்கினாள். இது உனக்கு தெரியுமா? தற்போது  பூமியின்  வெப்பநிலை உயர்வு 2.4 டிகிரி செல்சியஸை நோக்கிச் செல்கிறது. இதனை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவதே கிளாஸ்கோ உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம். இல்லையெனில் இதனால் ஒருபில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் அறிவியல் சொல்வதை உள்வாங்கி மனிதகுலம், உயிரினங்களின் ஒரே வீடான பூவுலகின் எதிர்காலத்தைக் காப்பாற்ற விரைந்து செயலாற்ற வேண்டியது உனது கடமை என்பதையும் உணர்வாயா?

கடைசியாக ஒன்று சொல்கிறேன்...

கிறிஸ்தவ வாழ்வு ஒரு விழாக் கொண்டாட்டம் அல்ல; மாறாக, அது நம்பிக்கையில் எழும் மகிழ்வு” (திருத்தந்தை பிரான்சிஸ்). எனது பிறப்பைக் கொண்டாடும் உனது செயல்பாடுகள் நம்பிக்கையின் மகிழ்வை எத்தனைபேருக்கு ஊட்டப்போகிறது? இருந்த இடத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்ளும் கற்கால மனிதர்களும் உண்டு. கடந்து செல்வதாலேயே வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் நவீன இயேசுக்களும் உண்டு. நீ யாராக மாற விரும்புகிறாய்? நன்மைகள் புரிய கடந்து செல்வாயா?

இப்படிக்கு அன்புடன் ... உள்ளக்குடில்

பாலன்  இயேசு.

25.12.2021

Comment