No icon

மோடி 2.0 - ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்

2019ஆம் ஆண்டிற்கான தேர்தல் திருவிழாக்கள் முடிந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கின்றது. நேருவுக்குப் பிறகு அதிகபடியான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று மோடி ஆட்சியமைத்திருப் பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.  தேர்தல் சமயத்தில் வாக்கு இயந்திரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும் ஏமாற்று வேலை
களும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி கள் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. இவற்றை உறுதிப் படுத்தும் விதத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. 
மே 06 ஆம் தேதி (2019) பீகார் மாநிலம் முசாபர்பூர் என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியி லிருந்து வாக்கு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரப்பிர தேசத்தில் ஒரு கடையிலிருந்த சில வாக்கு இயந்திரங்கள் கண்டு
பிடிக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்
தில் காரிலிருந்து சில வாக்கு இயந் திரங்கள் கண்டுபிடிக்கபட்டன. இன்னும் இவைபோன்று வெளி வராத சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. இவ்வாறு அப்பட்டமான தேர்தல் முறைகேடுகள் நடப்பதால்தான் எதிர் கட்சியினரும், அரசியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் தேர்தல் இயந்திரத்தில் வாக்குப் பதிவு செலுத்தும் முறைக்கு மாறாக வாக்குச் சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்றைக்கு பா.ஜ.க.அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றது.  
தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன் ஏகபட்ட விரக்தியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. காரணம் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பீடு, ஜி.எஸ்.டி, ரஃபேல் விமான ஊழல், விவசாயிகள் போராட்டம், வணிகர்கள் போராட்டம் போன்றவற்றோடு மதவாதம், இந்தித் திணிப்பு, வரலாற்றைத் திரித்துப் பதிவிடுவது, சிறுபான்மை யினரை அச்சத்தில் வைத்திருப்பது போன்றவை சென்ற ஆட்சியில் நடந்த கசப்பான அனுபவம் ஆகும். இவற்றுக்கு மத்தியிலும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது. 
மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற பா.ஜ.க அரசு தனது மதவாத அரசியலைத் தள்ளி வைத்துவிட்டு நாட்டு மக்களின் நலனுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. நலிவுற்ற நிலையில் இருக்கின்ற இந்தியப் பொருளாதாரத்தை (6.4ரூ) மேம்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ள அரசுமுன் இருக்கின்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், “விவசாயம், மின் உற்பத்தி, வங்கி ஆகிய மூன்று துறைகள் மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கின்றன. இதற்குக் காரணம் கடந்த அரசின் அளவுக்கு மீறிய குறுக்கீடுகள்தான்” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றார். மேலும் அரசின் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே போவதால் பற்றாக்குறை அதிகம் ஏற்படுகிறது. கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது. இனி வரும் நிதியாண்டில் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ரகுராம் குறிப்பிடுகின்றார். 
வேலை வாய்ப்பைப் பெருக்குவதும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதும், சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்ற சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு அரசே மானியம் வழங்கி இவர்களின் தொழிலை ஊக்கப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 5.9 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி நபர்களுக்கு வேலை என்று அறிவித்திருந்த மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது. இரண்டாவது முறையாக வந்திருக்கின்ற புதிய அரசு, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கிகள் பெரிதாக இல்லை என்பது நிதர்சனம். மற்ற தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்குச் செல்வாக்கு மிகவும் குறைவு என்பதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எனவே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் என்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியில் நிலவி வருவது நிதர்சனம். ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை, சாகர் மாலா திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. இவற்றிற்கான எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் அதிகம் வலுத்து வருகின்றது என்பதை நாடே நன்கறியும். எனவே இத்தகைய அழிவுத் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வருவதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 
விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவது தற் போதுள்ள பா.ஜ.க. அரசுமுன் இருக்கின்ற மிகப் பெரிய சவால். இந்தியாவின் இதயம் கிராமங்கள். இக்கிராமங்களின் முக்கியத் தொழில் விவசாயம். ஆனால் இன்றைக்கு விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக  அழிந்து கொண்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு ஊளுனுளு (ஊநவேசந கடிச ளுவரனல டிக னுநஎநடடியீiபே ளுடிஉநைவநைள)  ஆய்வறிக்கையில் 76ரூ விவசாயிகள் விவசாயத் தொழிலையே விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனக் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம் போதிய மழையின்மை, எதிர்பாரத இழப்புகள், விளை நிலங்களெல்லாம் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன, அரசின் மானியங்கள் சரிவர மக்களை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் மிகவும் நலிவுற்று கிடக்கின்றது. கடந்த ஆட்சியில் முன் வைக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பது மத்திய அரசு நன்கு அறியும். இரண்டாவது முறையும் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கின்றார்கள் என்றால் அம்மக்களின் நன் மதிப்பை உறுதி செய்ய நலம் நாடும் அரசாக இருக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு.  
அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமயல் எரி வாயு ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்திருக்கின்றது. கேஸ்  சிலின்டருக்கான மான்யம் நேரடியான வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று அறிவித்த மத்திய அரசு படிப்படியாக மானியங்களை நிறுத்தி வருகின்றது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கள்ள சந்தையயை ஒழித்து விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விலைவாசி குறைந்தபாடில்லை. இது தவிர பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை விலைவாசியை இன்னும் அதிகமாக உயர்த்தின. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மோடி அரசு எத்தகைய முயற்சிகளை எடுக்கப் போகின்றது என மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். 
பொதுவாக பா.ஜ.க. அரசின் மேல் எதிர் கட்சிகள் முன் வைக்கின்ற குற்றச்சாட்டு, பா.ஜ.க. மதவாத அரசியலைத் தூக்கிப் பிடிக்கின்றது என்பதுதான். இதனை நிலைநிறுத்த ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு போன்றவற்றை திணிக்கத் தீவிரம் காட்டி வருகின்றது என்ற கருத்து பரவலாக நிலவி வருகின்றது. சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒரே நாடு! ஒரே தேர்தல்” என்ற கருத்தை முன்மொழிந்தார். இக்கருத்துக்கு எதிர்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் அரசின் உள்
நோக்கத்தை வெளிப்படுத்து வதாகவே இது இருக்கின்றது. இந்தியா பல மொழி, பல கலச்சாரங்களைக் கொண்ட பன்மைத் தன்மை உடைய நாடு. மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்ததே இதற்குச் சான்று. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல் முறை அதிக முறைகேட்டிற்கு வழிவகுக்கும். 
சமயக் கோட்பாட்டை முன்னிருத்தாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசியில் அமைப்பு சாசனத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோரதத்துவம் ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி வருகின்ற ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தினால் மோடியால் மக்களின் நனமதிப்பை பெற முடியும். இக்கோட்பாட்டை வலியுறுத்தக் கூடிய தலை யாய பொறுப்பு பா.ஜ.க. வோடு கூட்டணியல் இருக்கக் கூடிய அ.தி.மு.க.வுக்கு உண்டு.
காரணம் திராவிடக் கட்சி களின் ஆணிவேரே பெரியார் என்ற ஆலமரம்தான். அவருடைய கொள்கை களை தள்ளி வைத்துவிட்டு அரசியல் நடத்துவது பெரி யாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. இது பெரியார் மண் என்பதைக் கடந்த காலங்களில் வெளி வந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. எனவே ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கான சமூக நீதி நிறைந்த அரசாட்சியை வழங்க வேண்டும். இதனை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
 

Comment