No icon

இறைவாக்கினர்களின் பரிந்துரையில் பிறந்த குழந்தைகளும், மரியாவின் ஒப்புதல் பெற்று குழந்தையாகப் பிறந்த இறைவனும்

இறைவாக்கினர்களின் பரிந்துரையில் பிறந்த குழந்தைகளும், மரியாவின் ஒப்புதல் பெற்று குழந்தையாகப் பிறந்த இறைவனும்
சிந்தனைச் செல்வர் பேராசிரியர் அ.குழந்தை ராஜ்,  காரைக்குடி.

என்ன தலைப்பே தலைசுற்றுகிறதே என எண்ண வேண்டாம். எல்லாக் குழந்தைகளும் இறைவனின் கருணையால் பிறப்பவர்களே. குழந்தை பெற இயலாத மலடியாய் உள்ளவர்களுக்குக் குழந்தைகளும், பிள்ளை பெறக் கூடாத கன்னி, குழந்தை பெறுவதும் விந்தையல்லவா?. வாக்கு மனிதனாய் மாற ஒரு மரியா தேவைப்பட்டார். அவரின் அனுமதியும் தேவைப்பட்டது.

வரலாற்றைப் பார்ப்போம். ஆபிரகா முக்கு மகன் வாக்களிக்கப்படுதல் (தொ.நூல் அதி 18) மூன்று வழிப்போக்கர்கள் கூடாரவாயிலில் வந்தனர். உண்டனர், உறங்கினர். 9 ஆம் வசனம் "அவர்கள்” அவரை நோக்கி ‘உன் மனைவி சாரா எங்கே’ என்று கேட்டார் கள். 10 ஆம் வசனம் ‘ஆண்டவர்’ வாக்குறுதி அளிக்கிறார். இளவேனிற் காலத்தில் ஒருமகன் பிறந்திருப்பான்" சாரா மலடி இதற்கிடையில் சாரா தன் அடிமைப் பெண் மூலமாக ‘இஸ்மாயிலைப் பெற்றார். 10 ஆண்டுகள் கழித்து அதாவது ஆபிரகாம் 99 வயது நிறைந்த வுடன் ஈசாக்கை பெற்றார். இவருக்குப் பின் பல குழந்தைகள் ஆண்டவர் வழிப்போக்கர்களைப் போல வந்து ஆபிரகாமுக்கு வாக்களித்து பிறந்த பிள்ளை ஈசாக்கு.

 எல்கானா என்பவர் எப்ராயீம் நாட்டைச் சார்ந்தவர். அவருக்கு இரு மனைவியர். அவர்கள் அன்னா, பெனின்னா. அன்னாவுக்கு குழந்தைகள் இல்லை. அப்போது குருவாக  இருந்தவர். ஏலி என்ற குருவானவர் ஒருநாள் ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஏலி இருக்கும்போது அன்னா மனம் கசந்து ‘தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பேன்‘ என மன்றாடினார் (1 சாமு: அதிகாரம் 1) ஏலி அவருக்கு ஆறுதல் கூறி ‘மன நிறைவோடு செல். இஸ்ரயேலின்கடவுள் உன் வேண்டு கோளை கேட்பார்’ என்றார். ஓராண்டு கழித்து ‘நான் ஆண்டவரிடமிருந்து கேட்டேன்‘ எனக்கூறி அவனுக்கு ‘சாமுவேல்’ என பெயரிட்டார். அதன்பின்னர் சாமுவேல் ஆலயத்தில் பணிபுரிந்தார். அப்போது அன்னா வேண்டிக் கொண்டது. “ஆண்ட வரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது” எனத் தெளிவாக பாடி மகிழ்ந்தார். இதையே மரியாவும் (லூக்கா 1:45-55) இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார் அதுதான்  ஆஹழுசூஐகுஐஊஹகூ  என்ற புகழ்ப்பாடல்.

‘என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது. என் மீட்பராம் கடவுளை நினைக் கின்றது” என்ற பாடல் பாடப்படாத’ அன்பிய வழிபாடு, மரியாயின் சேனையினர் யாரும் இல்லை. சாமுவேலும் இறைவாக்கினர் ஏலியின் பரிந்துரையால் பிறந்தவர்.

எலிசா என்ற இன்னொரு இறைவாக்கினர் சூனேம் நாடு சென்றார். அங்குள்ள பணக்காரப் பெண்ணுக்கு குழந்தை இல்லை. எலிசா ஒரு பெரிய இறைவாக்கினர். எலிசா தங்கியிருக்க தன் வீட்டின் மாடியில் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் அந்தப்பெண். ஆனால் அந்த வீட்டில்  ஒரு ‘குறை’ யிருப்பதைப் போல உணர்ந்த அவர், அந்தப் பெண்ணிடம் ‘அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்’ என்றார். 

ஆனால் ‘கன்னி ஒருத்தி கருத்தாங்கி’ பிள்ளை பெற்றவர் அன்னை மரியா. மரியாவை இறைவாக்கினர் யாரும் ஆசீர்வதிக்கவில்லை. கடவுளின் திருமுன் நின்று ‘அஞ்சல்காரரைப் போல’ செய்தி சொன்னவர் அதிதூதர் கபிரியேல் ‘மரியா’ என அழைக்காமல் ‘அருள் மிகப்பெற்றவரே’ என விளிக்கிறார். மரியாவின் சம்மதத்தை பெறுகிறார். ‘இதோ ஆண்டவரின் அடிமை’ என்ற பின்னரே கபிரியேல் அந்த இடத்தை விட்டகன்றார். பழைய ஏற்பாட்டில் பல்வேறு அரசர்களின் ‘தாய்மார்களின்‘ பெயர்தான் உள்ளது. மத்தேயு நற்செய்தியில் ஆண்வாரிசாக சொல்லப்பட்ட இடத்தில் ‘மரியாவின் கணவர் யோசேப்பு’ என்று யோசேப்பு அடையாளம் காட்டப்படுகிறார். தற்சமயம் உலகில் உள்ள 90 சதவீத மக்கள் தாங்கள் இருந்த இடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் நாம் நம் வீட்டிலிருந்தபடியே 153  மணி ஜெபமாலை சொல்லுங்கள். ஒளியின் தேவ இரகசியங்களையும் சேர்த்து 203 மணி ஜெபமாலை சொல்லிப் பாருங்கள். கரோனாவாவது நோயாவது - ஒன்றும் நம்மைத் தீண்டாது.                          
(தொடரும்)

Comment