No icon

புனித வாரத்தில் திருத்தந்தை

சிறைவாசிகளுடன் பெரிய வியாழன்  திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
புனித வியாழன் அன்று உரோம் நகருக்கு  அருகிலுள்ள வெல்லெத்ரி நகரின் சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள சிறைவாசிகளுக்கு ஆண்டவரின் இறுதி
இராவுணவுத் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றினார்.  வெளியிலிருந்து வீட்டுக்குள் வரு வோரின் தூசி படிந்த பாதங்களைக் கழுவிவிடும் அக்கால அடிமைகளின் பணியை தன் செயல் வழியாகக் காண்பித்த இயேசு, அதே வழியை தன் சீடர்களும் பின்பற்றவேண்டும் என தம் மறையுரையில் அழைப்பு விடுத்தார். இறுதியில்.  நான் இப்போது நிறைவேற்ற உள்ள காலடிகளைக் கழுவும் நிகழ்வு, நாம் ஒவ்வொருவரும் சேவையில் உடன்பிறந்தோராய், நண்பர்களாகச் செயல்பட உதவட்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிறைவாசிகளுடனான திருத்தந்தையின் தோழமை நெகிழ்ச்சியானதாக அமைந்தது.
கொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையேற்று நடத்திய சிலுவைப்பாதைச் சிந்தனை களை, கொன்சொலாத்தா (ஊடிளேடிடயவய) துறவு சபையைச் சேர்ந்த அருள்சகோதரி யூஜேனியா பொனெத்தி (நுரபநnயை
க்ஷடிநேவவi) உருவாக்கியிருந்தார். ‘இனி ஒருபோதும் அடிமைகள்
கிடையாது’ என்று பொருள்படும் “ளுடயஎநள nடி ஆடிசந” என்ற அமைப்பின் தலைவராக பணியாற்றும் 80 வயதான அருள்சகோதரி பொனெத்தி, மனித வர்த்தகத்தின் கொடுமைகளுக்கு உள்ளாகும் மக்களின் வேதனைகளை, இவ்வாண்டின் சிலுவைப்பாதை முயற்சியின் மையப் பொருளாக வடிவமைத்திருந்தார்.
உரோம் நகரின் கொலோசெயம் திடலில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொள்ளும் மரபை, 18 ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட் உருவாக்கினார். இடைக்காலத்தில் தடைப்பட்டிருந்த இந்த மரபை, 1964 ஆம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6 ஆம் பவுல் அவர்கள் மீண்டும் புதுப்பித்தார்.
ஈராயிரமாம் ஆண்டு, புனித யூபிலி கொண்
டாடப்பட்ட வேளையில், இந்தச் சிலுவைப் பாதையின் கருத்துக்களை, புனிதத் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் எழுதினார் என்பதும், 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சிலுவைப் பாதையின் கருத்துக்களை, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் எழுதினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  திருத் தந்தையின் சார்பாக உரோமைய ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்சலோ தே தொனாத்திஸ் துவக்கி வைக்க, ஒரு சில குடும்பத்தினர், துறவிகள் ஆகியோர், இவ்வாண்டு நடை பெற்ற சிலுவைப் பாதை
யின்போது, தலங்களுக்கு இடையே சிலுவையைச் சுமந்து சென்றனர்.
இச்சிலுவைப்பாதை பக்தி முயற்சி யில், 15,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
புனித வெள்ளி சிலுவைப்பாதை - திருத்தந்தையின் இறுதி செபம்
உரோம் நகரின் கொலோசெயம் திடலில், புனித வெள்ளி இரவு, 9.15 மணிக்கு திருச்சிலுவைப்பாதையை திருத்தந்தை தலைமையேற்று வழிநடத்தினார்.  அந்த பக்தி முயற்சியின் இறுதியில் கூறிய செபத் தின் தமிழ் மொழியாக்கம் இதோ:
ஆண்டவராகிய இயேசுவே! உலகின்
அனைத்துச் சிலுவைகளிலும் உமது சிலுவை யைக் காண எங்களுக்கு உதவியருளும்.
தங்கள் உணவுக்காகவும், அன்புக் காகவும் பசித்திருப்போரின் சிலுவை தங்கள் பிள்ளைகளாலும், குடும்பத்தினராலும் தனிமையில் விடப்பட்டோரின் சிலுவை; நீதிக்காகவும், அமைதிக்காகவும் தாகம் கொள்வோரின் சிலுவை; நம்பிக்கை கொள்ள இயலாதோரின் சிலுவை; வயது முதிர்ச்சி, மற்றும் தனிமையின் பாரத்தால் குனிந்திருப்போரின் சிலுவை; அச்சத்தால் மூடப்பட்ட கதவுகளையும், அரசியல் கணக்குகளால் பூட்டப்பட்ட இதயங்களை யும் காணும்புலம் பெயர்ந்தோரின் சிலுவை; தங்கள் அப்பழுக்கற்ற, தூய்மையான நிலையில் காயமடைந்துள்ள சிறியோரின் சிலுவை;
உறுதியற்ற நிலை மற்றும் நொடிப்பொழுதுக்
கலாச்சாரம் என்ற இருளில் அலைந்து திரியும் மனிதகுலத்தின் சிலுவை; காட்டிக்கொடுக்கப் படுவதாலும், சுயநலத்தாலும் உடைந்துபோயிருக் கும் குடும்பங்களின் சிலுவை; உமது ஒளியை இவ்வுலகிற்குக் கொணரும் முயற்சியில் அவமானப்
பட்டு, ஒதுக்கப்பட்டிருக்கும் அர்ப்பணிக்கப்பட் டோரின் சிலுவை.
தங்கள் துறவு வாழ்வின் பாதையில், ஆரம்ப அன்பையும், ஆர்வத்தையும் தொலைத்துவிட்ட அர்ப்பணிக்கப்பட்டோரின் சிலுவை; உம்மை நம்பி, உமது வார்த்தையின்படி நடக்க முயன்று, மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுள்ள உமது குழந்தை
களின் சிலுவை; எமது பலவீனம், காட்டிக் கொடுத்தல், வெளிவேடம், பாவம், உடைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியவற்றின் சிலுவை; நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருப்பதன் வழியே, திருமுழுக்குப் பெற்றவரிடமும் உமது அன்பை எடுத்துச் செல்ல முயல்வதில் போராடிவரும் உமது திருஅவையின் சிலுவை; உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தாக்குதலைச் சந்திக்கும் உமது மணமகளான திருஅவையின் சிலுவை; பேராசை, அதிகாரம் ஆகிய வற்றால் பார்வை இழந்த எமது சுயநலக் கண்கள் முன்னே, ஆபத்தான முறையில் அழிந்துவரும் எமது பொதுவான இல்லத்தின் சிலுவை - ஆகிய அனைத்துச் சிலுவைகளிலும் உமது சிலுவையைக் காண எங்களுக்கு உதவியருளும். ஆண்டவராகிய இயேசுவே, அனைத்துத் தீமைகளுக்கும், அனைத்து மரணங்களுக்கும் எதிராக நீர் அடைந்துள்ள உறுதியான வெற்றியிலும், உயிர்ப்பிலும், எங்கள் நம்பிக்கையை மீண்டும் தூண்டியருளும். ஆமென். (நன்றி : வத்திக்கான் வானொலி)
உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாத் திருப்பலி
ஏப்ரல் 21 ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று  காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புக்கொடுத்தார்.  இத்திருப்பலியில் பங்குகொள்வதற்காக, ஞாயிறு காலை ஆறு மணிக்கெல்லாம், பக்தர்கள் கூட்டம், வளாகத்தின் எல்லாப் பக்கங்களிலும் அலைமோதின.
இத்திருப்பலியை நிறைவுசெய்து பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் நடுமாடத்தில் நின்று, உரோம் நகருக்கும், உலகுக்குமென, ’ஊர்பி எத் ஓர்பி’ செய்தியும், சிறப்பு ஆசீரும் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
ஏப்ரல் 20, சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், பாஸ்காத் திருவிழிப்பு வழிபாட்டை தலைமையேற்று திருத் தந்தை பிரான்சிஸ்  வழிநடத்தினார்.
பசிலிக்காவின் நுழைவாயில் மண்டபத்தில் புதிய நெருப்பு அர்ச்சிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் பசிலிக்காவுக்குள், பாஸ்கா மெழுகுதிரி பவனியில் சென்றார்.திருத் தந்தையைத் தொடர்ந்து, கர்தினால்கள் மற்றும் சில பொதுநிலையினரும் அந்தப் பவனியில் சென்றனர். பின்னர், பாஸ்கா பாடல் முழங்கப்பட்டது. அதன்
பின்னர், இறை வார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, மற்றும் திருநற்கருணை வழிபாடு ஆகியவற்றை திருத்தந்தை நிறைவேற்றினார்.
இத்தாலி, ஈக்குவதோர், பெரு, அல்பேனியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு, திருமுழுக்கு, உறுதிபூசுதல் மற்றும் திருநற்கருணை அருளடையாளங்களைக் கொடுத்தார்.

Comment