No icon

இந்தியாவில் இறை இரக்க ஞாயிறன்று இலங்கைக்காக சிறப்பு செபம்

ஏப்ரல் 28 ஆம் தேதி இறை இரக்க ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள அனைத்து, இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆலயங்களிலும், இலங்கை மக்களுக்காக சிறப்பான செபங்களை மேற்கொள்ளுமாறு, இலத்தீன் வழிபாட்டு முறை இந்திய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர்  பிலிப்பு நேரி பெராவோ அழைப்பு விடுத்திருந்தார். அவர் எழுதிய மடலில் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றப்படும் திருப்பலிகளுடன், மெழுகுதிரிகள் ஏந்திய பவனிகளையும், நற்கருணை ஆராதனைகளையும் மேற் கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார். இதன்
படி இந்தியா முழுவதும் குறிப்பாக
தமிழகத்தில் அனைத்து மறைமாவட்டங்
களிலும் அனைத்து பங்கு ஆலயங்கள், திருத்தலங் கள், பேராலயங்களிலும், துறவற இல்லங்களிலும் சிறப்பு ஆராதனையும் மெழுகுதிரி ஏந்திய ஊர்வலங்களும் நடைபெற்றன.
திருச்சி மறைமாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை மாலை செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தொடங்கி, மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம் வரை மெழுகுதிரிகளை கையிலேந்தி, கண்டன - மௌன ஊர்வலம் நடைபெற்றது. இறுதியில்  ஜெப வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.  பிரிந்த சபையினரின் பிரதிநிதிகளும் இஸ்லாமிய மற்றும் இந்து சமயத் தலைவர்களும் மனித நேயம் கொண்ட மனங்களும் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். திருச்சி மறைமாவட்டத் தொடர்பாளரும் மறைமாவட்ட முன்னாள் முதன்மைக்குருவுமான அருள்பணி.யூஜின் ஏனைய அருள்பணியாளர்களோடு இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
 

Comment