No icon

Asian News

கருத்துச் சித்திரங்களின் கண்காட்சி

கருத்துச் சித்திரங்களின் கண்காட்சி

பிலிப்பைன்ஸ் உள்ள செபு என்னும் நகரத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கருத்துச் சித்திரக் கலைஞர்கள் ஒன்று கூடி கார்ட்டூன்ஸ் எனப்படுகிற கருத்துச் சித்திரங்களின் கண்காட்சியை நடத்தினர்இவ்வாண்டு மனித உரிமைகள் உலகில் எப்படி மதிக்கப்படுகிறது அல்லது நசுக்கப்படுகிறது என்ற கருப்பொருளில் கருத்துச் சித்திரங்களை வரைந்திருந்தனர். இதில் இந்தோனேசியா. ஈரான், செர்பியா, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்த பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டு தங்களுடைய படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்மேலும் 42 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துச் சித்திர வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களுடைய மேலானப் படைப்புகளை படைத்திருந்தனர்ஈரானிய அரசால் தடைசெய்யப்பட்ட கருத்துச் சித்திரங்களை அந்நாடுகளின் கலைஞர்கள் துணிச்சலாக காட்சிப்படுத்தியிருந்தது மிகவும் பாராட்டத் தக்கதுசிரிய அரசால் அவர்தம் ஒவியங்களுக்காகவும் கருத்துச் சித்திரங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு ஒவியக் கலைஞர் தாகர் சாவோத்  அவர்களின் படைப்பும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பெல்ஜிய கருத்துச் சித்திரக் கலைஞர் லுக் டெஷ்ஷிமேக்கர் பாலஸ்தீனிய சித்திரக் கலைஞர் அபு ஹாசன் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தது. இந்த பாலஸ்தீனியக் கலைஞர் அவர்தம் கருத்துச் சித்திரங்களுக்காக 2009 ஆம் ஆண்டு எண்பது நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய நம் வாழ்வு வார இதழில் மிகவும் துணிச்சலாகவும் நையாண்டியாகவும் ஆமோஸ் என்ற பெயரில் கருத்துச் சித்திரங்களை வரைந்து ஊக்கப்படுத்தும் ஓவியக் கலைஞரை மிகவும் பாராட்டுகிறோம்.

Comment