No icon

பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் துன்புறும் புலம்பெயர்ந்தோர்

பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் துன்புறும் புலம்பெயர்ந்தோர்

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி புகுந்துள்ள மக்களுள் 55 விழுக்காட்டினர் இந்த கோவிட் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடும் மக்கள், அண்மைய கோவிட் பெருந்தொற்று காலத்தில் தங்குமிடங்களின்றியும், போதிய நிதி வசதிகளின்றியும் வாடுவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் இயேசு சபையினரின் ஜேஆர்எஸ் உதவி அமைப்பும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ள நிலையில், போதிய வேலைவாய்ப்புகள் இன்றி துன்புறும், அடைக்கலம் தேடும் மக்களுக்கு தொடர்ந்த ஒரு வருமானத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதன் தேவையை ஜேஆர்எஸ் அமைப்பு சுட்டிக்காட்டியதுள்ளது .

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி புகுந்துள்ள மக்களுள் 55 விழுக்காட்டினர் இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், தங்குமிடங்களின்மையால் துன்புறுவதாக அறிவித்துள்ளனர். பெருந்தொற்று கால வேலை இழப்புக்கள் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், 36 விழுக்காடு புலம்பெயர்ந்தோர், வீட்டு வாடகையை கட்டமுடியாமலும், 34 விழுக்காட்டினர் மின்சார கட்டணத்தை செலுத்தமுடியாமலும், கடந்த 3 மாதங்களில் 45 விழுக்காட்டினர் உணவு பற்றாக்குறையால் அவதியுற்றதாகவும், அமைப்பு நடத்திய ஆய்வுகள் வழி தெரிய வந்துள்ளது.

அடைக்கலம் தேடிவரும் மக்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பல்வேறு துன்ப நிலைகளை அடைந்துவந்தாலும், இந்த கோவிட் காலத்தில் அவர்களின் துன்பம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் உதவி அமைப்பான ஜேஆர்எஸ் கவலையை வெளியிட்டுள்ளது.

 

கிளாஸ்கோ உச்சி மாநாட்டையொட்டி ‘காலநிலை ஞாயிறு’

இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில், காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் ஊடீஞ26 உலக உச்சி மாநாட்டிற்காக, பிரித்தானியா, மற்றும், அயர்லாந்து நாடுகளின் கிறிஸ்தவர்கள், காலநிலை ஞாயிறு என்ற தலைப்பில், இறைவேண்டல் மற்றும், தியானங்களை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாண்டு அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 12 ஆம் தேதி வரை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள, காலநிலை மாற்றம் பற்றிய 26 வது உச்சிமாநாடு, நல்ல பலன்களைத் தரவேண்டுமென்று இறைவனை மன்றாடுவதற்கென்று, இந்த மாநாடு துவங்குவதற்குமுன், ஏதாவது ஒரு ஞாயிறைத் தெரிவுசெய்து, அந்நாளில் இறைவேண்டல், சிந்தனை, காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுமாறு கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், "காலநிலை ஞாயிறு" கொண்டாடப்படுமாறு, பிரித்தானியா மற்றும், அயர்லாந்து கிறிஸ்தவ சபைகள் அமைப்பின் ஆதரவோடு, சுற்றுச்சூழல் விவகார கூட்டமைப்பு (நுஐசூ), கடந்த 2020 ஆம் ஆண்டில் காலநிலை ஞாயிறு என்ற ஓர் இறைவேண்டல் நடவடிக்கையைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 2021 ஆம் ஆண்டிலும், காலநிலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது.

காலநிலை ஞாயிறு நடவடிக்கையில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகிய பகுதிகளின் 1,500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் இணைந்துள்ளன. இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் ஆயர் பேரவையின் பிறரன்பு ஊஹகுடீனு அமைப்பும், இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 4 ஆம் தேதி வரை சிறப்பிக்கப்படும் “படைப்பின் காலம்” என்ற திருவழிபாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, காலநிலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

Comment