No icon

ஆகஸ்ட் 15

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு

இப்பெருவிழா கீழைத் திரு அவையில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே டார்மிஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டுள்ளது. அதன்பிறகு, திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1568 ஆம் ஆண்டு, அகில உலகத் திரு அவை முழுவதும் இவ்விழாவைக் கொண்டாட அனுமதி அளித்தார். “மரியா இறைவனின் மாசற்ற தாய், அவருடைய மண்ணக வாழ்வின் பயணம் முடிந்தபோது, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இதை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட விசுவாசக் கோட்பாடாக நாம் அறிவிக்கின்றோம்; பறைசாற்றுகின்றோம் மற்றும் வரையறுக்கின்றோம்.” இயேசுவின் தாய் வருங்காலத்தில் நிறைவு பெறப்போகும் திரு அவையின் உருவமும், தொடக்கமுமாய் இருக்கிறார். இப்பெருவிழாவானது கடன்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

Comment