Namvazhvu
தமிழகத் திருச்சபைச் செய்திகள் குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம் அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றியத்துடன் இணைப்பு விழா
Wednesday, 13 Mar 2019 11:03 am

Namvazhvu

52 கிளைகளுடன் செயல்பட்டு வரும் குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத்தை அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றியத்துடன் இணைக்கும் விழா. ஜனவரி 12 ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு முளகுமூடு புனித மரியன்னை ஆலய கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு கத்தோலிக்க ஒன்றிய தலைவர் திரு.அருள்தாஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறை

மாவட்ட முதன்மைக்குரு பேரருட்திரு. .இயேசுரெத்தினம், குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்கச் சங்க இயக்குநர் பேரருட்திரு டோமினின் .கடாட்சதாஸ்,தேசிய இணைப்பொருளாளர் திரு.. பிச்சை, அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றிய மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. .ஜோசப் பாக்கியராஜ் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். குழித்துறை மறைமாவட்டத் தலைவர் திரு..பிரைட் சேவியர் வரவேற்புரை வழங் கினார். மறைமாவட்டச் செயலர் திரு. .ஜாண் ஜஸ்டின்ராஜ்  மறைமாவட்டச் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்பித்தார்.

அனைத்திந்திய கத்தோலிக்க ஒன்றிய தமிழ்நாடு பொதுச்செயலாளர் திரு. .டேவிட்மான்சிங் திரு.ஜோசப்ராஜா, முளகுமூடு வட்டார முதன்மைக்குரு பேரருட்திரு.ஹில்லாரி, காரங்காடு வட்டார முதன்மைக்குரு. பேரருட்பணி ஜார்ஜ் மாத்திரவிளை பங்குதந்தை அருட் பணி. பென்சர் சேவியர், மறை மாவட்ட துணைத்தலைவர் திரு.அருள்தாஸ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

செங்கல்பட்டு, மறைமாவட்டத் தலைவர் திரு. .ஞானபிரகாசம், கோவை மறைமாவட்ட பொதுச் செயலாளர் திரு.. லாரன்ஸ் லெட்சுமி நாராயணன், சென்னை மறைமாவட்டத்தைச் சார்ந்த இணைச் செயலாளர் திரு.அரசன்தாஸ், பொதுச்செயலர் திரு. செல்வம்துணைத் தலைவர் திரு.டேவிட், திண்டுக்கல்மறைமாவட்ட துணைச்செயலாளர் திரு.மு.புஷ்பராஜ் சேவியர், தூத்துக்குடி மறைமாவட்டத் தலைவர் திரு.ளு.பீட்டர் பத்திநாதன், பாளை மறைவமாவட்ட பொறுப்பாளர் திரு..ஜாண் வின்ஸ்லின், குழித்துறை மறைமாவட்டத்திலுள்ள காரங்காடு, முளகுமூடு, மாத்திர விளை, புத்தன்கடை & திருத்துவபுரம் வட்டார நிர்வாகிகள் மற்றும் 52 கிளைச் சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் 300பேர் விழாவில் கலந்து கொண்டனர்.

குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்க செய்தி தொடர்பாளராக திரு..மரிய சிலுவை, மறைமாவட்ட சட்ட ஆலோசகராக திரு. ஜார்ஜ் பிலிஜின் ஆகியோரை சங்க இயக்குநர் அருட்பணி. டோமினிக் .காட்சதாஸ் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு அரணாகவும், சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அமைப் பாகவும், சாதி, சமய நல்லுறவை வளர்கின்ற அமைப்பாகவும் அரசியல் விழிப்புணர்வை கத்தோலிக்க மக்களுக்கு வழங்கி அரசியல் ரீதியாக வழிநடத்துகின்ற அமைப்பாகவும் தொடர்ந்து கத்தோலிக்க சங்கம் பணியாற்ற வேண்டுமென்று சிறப்பு ஆசியுரை வழங்கிய குழித்துறை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருட்பணி. இயேசுரெத்தினம் கத்தோலிக்க சங்கத்தை கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியை மறைமாவட்ட பொருளர் திரு. ஆனிஜூவரேகா தொகுத்து வழங்கினார். மறைமாவட்ட துணைத்தலைவர் திரு. டு.ஜஸ்டஸ் றோக் நன்றிகூற, இணைச் செயலர் .சசியின் இறுதி ஜெபத்துடன் விழா நிறைவுபெற்றது.

தமிழக கத்தோலிக்க சங்க உறுப்பினர்களே! தயவு செய்து நம் வாழ்வு சந்தாதாரராகுங்கள்.