Namvazhvu
உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கப் பிரதிநிதிகள் கூட்டம்
Monday, 24 Jun 2019 09:51 am

Namvazhvu

உக்ரைன் நாட்டில் தற்போது நிலவும் மிகவும் இக்கட்டான மற்றும், குழப்பம் நிறைந்த சூழல்களை முன்னிட்டு, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு, அவர்களை உரோம் நகருக்கு அழைப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் மாமன்ற உறுப்
பினர்கள் மற்றும், தலத்திருஅவைத் தலைவர்
களுடன், வருகிற ஜூலை மாதம் 5,6 ஆகிய
நாள்களில், நடைபெறும் கூட்டத்தில், அந்
நாட்டுடன் தொடர்புடைய திருப்பீட தலைமை யகத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள். இதன் வழியாக, உக்ரைன் நாட்டிலும், உலகின்
அனைத்துப் பகுதிகளிலும் மேய்ப்புப்பணி யாற்றுகின்ற, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத்
திருஅவையுடன், தான் கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கு திருத்தந்தை விரும்புகிறார் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும் தேவைகள் பற்றி ஆழமாக அறிவதற்கும், இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை மற்றும் ஏனைய கிறிஸ்தவத் திருஅவைகளுடன், இயலக்கூடிய விதத்தில், இணக்கத்துடன், துன்புறும் மக்களுக்கு ஆதரவாகவும், அமைதியை ஊக்கு விக்கவும், நற்செய்தியை மிகவும் பலனுள்ள முறையில் அறிவிக்கவும், இக்கூட்டம் உதவும் என நம்பப்படுகின்றது.