Namvazhvu
பாஸ்கா திருவிழிப்பு
Thursday, 20 Jun 2019 09:38 am

Namvazhvu

பாஸ்கா திருவிழிப்பு ஐந்து அம்சங்களால் ஆனது; அதாவது, 1. நெருப்பு புனிதப்படுத்தப்படுவது, 2. புனிதப் படுத்தப்பட்ட நெருப்பிலிருந்து பாஸ்காத் திரியைப் பற்றவைத்தல், 3. பாஸ்காத்திரியின் பவனி, 4. பாஸ்கா திரிக்கு தூபம் காட்டுதல் 5. பாஸ்காத் திரி பற்றிய முழக்கம்
1.     பாஸ்கா திருவிழிப்பில் பங்குபெறும் குருக்கள் திருவுடை அணிந்து கோவிலின் முற்றத்துக்குச் செல்வார். அதன்பின்
கோவில் எரிந்துகொண்டிருக்கும் பின் விளக்குகள் அணைக்கப்படும். டார்ச்லைட் துணைக்
கொண்டு நெருப்பைப் புனிதப்படுத்தும் செபம் சொல்லப்படும். அதன்பின் நெருப்புத் துண்டுகள் தூபக் கலசத்தில் இடுக்கி துணைகொண்டு எடுத்து போடபடும்.
2.    புனிதப்படுத்தப்பட்ட நெருப்பிலிருந்து பாஸ்கா திரி பற்றவைக்கப்படும். எழுதுகோல் கொண்டு பாஸ்கா திரியில் சிலுவை அடையாளமும் நடப்பின் ஆண்டும் வரையப்படும். பாஸ்கா திரியில் ஏற்கெனவே ஒட்டப்பட்டிருக்கும் சிலுவையின்  குறுக்கு கோட்டிற்கு மேல் இடதுபுறம் நடப்பு ஆண்டின் முதல் எண்ணும், வலதுபுறம் இரண்டாவது எண்ணும், குறுக்குக் கோட்டிற்குக் கீழ் இடது புறம் மூன்றாவது எண்ணும், வலதுபுறம் நான்காவது எண்ணும் வரையப்படும்.
3.    இதன்பிறகு பாஸ்காதிரி பவனி தொடங்கும். பவனியின்போது பாஸ்கா திரியை தூக்கி செல்பவர் - இவர் திருத்தொண்டராகவோ அல்லது திருத்தொண்டராகச் செயல்படும் வேறொரு குருவோ - ’கிறிஸ்துவின் ஒளி இதோ’ என்று மூன்றுமுறை ஆலய முற்றத்தில், ஆலயத்தின் நடுவில், திருப்பீட வளாகத்திற்கு முன்பு - முழுக்கமிடுவார். பின் நற்செய்தி வாசக மேடைக் கருகில் வைக்கப்பட்டிருக்கும் உயரமான ஸ்டாண்டில் பாஸ்கா திரியை சொருகிவைக்கிறார்.
4. பின் அதற்குத் தூபம் காட்டப்படும்.
5. அதன்பின் திருப்பலி நூலில் இருந்து - அது உயரமான ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருக்கும் ’விண்ணகத் தூதர் அணிகள் முழங்குவதாக’ என்ற பாடலை முழக்கமிடுவார்.
இந்தப் பாடலைத் தொகுத்தவர், புனித அகுஸ்தினார் என்று சிலர் சொல்லுகின்றனர். ஆனால் பெரும்பாலோர் புனித அம்புரோஸ்தான் இயற்றினார் என்கிறார்கள். எது சரியானது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் இப்பாடல் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதில் எந்த ஐயமும் இல்ல.
இப்பாடலின் சிறப்பு மூன்றாவது முறையாக ’கிறிஸ்துவின் ஒளி இதோ’ என்று திருத்தொண்டர் ஒலித்தது. நம்பிக்கையாளர் அனைவரும் தங்கள் திரிகளை ஏற்றுகிறார்கள்; ஆலயத்தில் உள்ள மின் விளக்குகள் ஜொலிக்கின்றன. மக்கள் மத்தியில் ஒருவித உற்சாக உணர்வு (குதுகலம்) தோன்றுகிறது. தாங்கள் புதுவாழ்வு பெற்றதாக உணர்கிறார்கள்.