புனித செசிலியா உரோமை நகரில் 2 ஆம் நூற்றாண்டு பிறந்தார். இறையன்பில் வளர்ந்து, செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து இறைவனை மாட்சிப்படுத்தி, தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்து, இறைவனைப் புகழ்ந்தார். விவிலியம் எங்கு சென்றாலும் தம் கரங்களில் எடுத்து சென்றார். வலேரியன் என்பவரை திருமணம் செய்து, அவரை மனம்மாற்றினார். கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்றார். தெர்த்துல்லியன் செசிலியாவை கைது செய்து கிறிஸ்துவை மறுதலிக்க கூறினான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்றார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.