வாலுவா நகர் புனித ஃபெலிக்ஸ் 1127 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் பிறந்தார். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும், ஏழ்மையை பின்பற்றி, ஏழைகளை அன்பு செய்தார். ஒருமுறை சாலையில் குளிரில் நடுங்கும் ஏழை மனிதனுக்கு, தமது மேலங்கியை போர்த்திவிட்டு வீடு திரும்பினார். சின்னச் சிறிய சகோதரர்களுக்கு செய்யும் உதவி கிறிஸ்துவுக்கே செய்கிறோம் என்றார். ஆல்ப்ஸ் மலையில் சிறிய குடில் அமைத்து, தியானம் வழி கிறிஸ்துவின் அன்பை சுவைத்தார். தூய்மைக்கு இடறல் ஏற்படுத்தும் செயல்களை அகற்றினார். ஸ்பெயின், வட அமெரிக்கா போன்ற நாடுகளில் மூர் இனத்தவர்களால் கைது செய்யப்பட்டு, சிறையில் வாழும் மக்களை மீட்க திருத்தந்தையின் ஆசியுடன், மூவொரு இறைவனின் சபை ஆரம்பித்தார். இறைத்திட்டம் உணர்ந்து செயல்பட்டு, 1212 ஆம் ஆண்டு, நவம்பர் 4 ஆம் நாள் இறந்தார்.