Namvazhvu
செப்டம்பர் 14 திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள்
Saturday, 17 Sep 2022 07:48 am
Namvazhvu

Namvazhvu

திருச்சிலுவையின் வெற்றி விழா திருச்சபையின் ஆரம்பக் காலம் முதலே விசுவாசிகளால் கொண்டாடப்பட்டு வந்தது. 312 ஆம் ஆண்டு, உரோமை பேரரசராக ஆட்சி செய்ய கான்ஸ்டன்டைன் மற்றும் மாக்ஸென்டியுஸ் இருவருக்கும் இடையே போர் மூண்டது. கான்ஸ்டன்டைன் போரில் வெற்றி பெற கடவுளிடம் செபித்தார். அப்பொழுது வானில் ஒளிரும் சிலுவை அடையாளம் தோன்றியது. அதில், “இந்த அடையாளத்தின் வழியாக நீ வெற்றி கொள்வாய்என்று எழுதி இருந்தது. 312 ஆம் ஆண்டு, கான்ஸ்டன்டைன் போரில் வெற்றி பெற்றபோது, “கிறிஸ்தவத்தின் அடையாளமான இந்த சிலுவை உரோமையின் அடையாளமாகவும், போர்வீரர்களின் கவசத்திலும் பொறிக்கப்பட வேண்டும்என்றார். 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள் புனித ஹெலினா சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உண்மையான சிலுவையைக் கண்டெடுத்தார். கான்ஸ்டன்டைன் கல்வாரியில் இரண்டு ஆலயங்கள் எழுப்பினார். அதுமுதல் திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா கொண்டாடப்பட்டு வந்தது.