Namvazhvu
திருத்தந்தை செப்டம்பர் 13-15, 2022ல் கஜகஸ்தானில் திருத்தூதுப் பயணம்
Wednesday, 03 Aug 2022 10:05 am
Namvazhvu

Namvazhvu

ஆகஸ்ட் 1, திங்களன்று தொடங்கியுள்ள, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) குறித்த பத்தாவது ஆய்வுக் கருத்தரங்கை மையப்படுத்தி,  திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.

இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கையொட்டி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதும், அவற்றை வெறுமனே சேமித்து வைத்திருப்பதும் அறநெறிக்கு முரணானது. பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பது என்ற தவறான உணர்வு வழியாக, நிலைத்ததன்மை மற்றும், அமைதிக்கு உறுதிசெய்வதற்கு முயற்சிப்பது, மக்களுக்கு இடையே உறவுகளை நஞ்சுப்படுத்துவதிலும், உண்மையான உரையாடலைத் தடைசெய்வதிலும் கொண்டுபோய் நிறுத்தும்என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

அணு ஆயுதப் பரவலையும், ஆயுதத் தொழில்நுட்பத்தையும் தடைசெய்யவும், அணு சக்தியை அமைதியான நடவடிக்கைக்குப் பயன்படுத்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் அணு ஆயுதப் பரவலை முற்றிலும் தடைசெய்யவும், வரலாற்று சிறப்புமிக்க உலக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அழைப்புவிடுக்கிறது.

கஜகஸ்தானுக்குத் திருத்தூதுப் பயணம்

மேலும், கஜகஸ்தான் அரசு மற்றும், திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தி தொடர்பகம், ஆகஸ்ட் 1, திங்களன்று அறிவித்துள்ளது.

இப்பயணத்தின்போது, உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் நடத்தும் ஏழாவது மாநாட்டையொட்டி, திருத்தந்தை Nur-Sultan நகருக்குச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.