Namvazhvu
பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ கிறிஸ்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையுள்ளது
Tuesday, 02 Aug 2022 13:00 pm
Namvazhvu

Namvazhvu

 இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனத் தொடரப்படும் வழக்குகளை விசாரிப்பதில் இந்தியாவினுடைய ஒரு முக்கிய நீதிமன்றம் தாமதம் செய்கிறது என்று ஊடகங்களில் வெளியான செய்தியை பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் மறுத்து, அச்செய்திக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார். மரியாதைக்குரிய உச்சநீதிமன்றத்தை பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டதும் நான் மிகவும் மனம் வருந்தினேன். இந்த குற்றச்சாட்டில் எந்த ஒரு உண்மையையும் காண முடியாது. இதை நான் மனப்பூர்வமாக எதிர்க்கிறேன் என்று பேராயர் பீட்டர் மச்சாடோ, ஜூலை 30 ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.

இது குறித்து நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி D.Y. சந்திராசுட், “உச்சநீதிமன்றம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் செய்கிறது என்று நீங்கள் பத்திரிகைகளில் எழுதி வெளியிடுகிறீர்கள், ஒரு நீதிபதியை எந்த அளவிற்கு விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. இதுபோன்ற செய்திகளை உங்களுக்கு யார் தருவது?” என்று கேட்டார். மேலும் தான் தீர்ப்பு வழங்கவேண்டிய ஒரு வழக்கில் தாமதம் ஏற்பட்டது, தான் கொரோனா பெரும்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாலே என்பதையும் இங்கே அவர் தெளிவு படுத்தினார். பேராயர் பீட்டர் மச்சாடோ, “கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதும்  நீதிபதிகள் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கிறது. எனவே நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள போவதில்லை”என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.