Namvazhvu
குடந்தை ஞானி FCRA  உரிமத்தை புதுப்பிக்க அனுமதி 
Thursday, 13 Jan 2022 08:53 am
Namvazhvu

Namvazhvu

அன்னை தெரசாவின் பிறரன்பு சபையின் பிறரன்புப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறுவதற்கும், அதனைப் பயன்படுத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க மறுத்திருந்த இந்திய அரசு, தற்போது அதனைப் புதுப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி மறுத்த இந்திய அரசு, தற்போது, அதாவது, இரண்டுவார காலத்திற்குள் அதனை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது.
FCRA எனப்படும், வெளிநாட்டு உதவிபெறுவதைக் கண்காணிக்கும் விதிகளின் கீழ், புதுப்பிப்பு அனுமதி மறுக்கப்பட்ட அன்னை தெரேசாவின் பிறரன்பு புதல்வியர் சபை சகோதரிகள், தற்போது அவ்வனுமதியைப் பெற்றுள்ளதைக் குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட, அத்துறவு சபையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர், அருள்சோகோதரி சுனிதா குமார் அவர்கள், அதிக காலதாமதமின்றி இந்திய உள்துறை தங்களின் அனுமதியை புதுப்பித்தது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றார்,
அன்னை தெரசா சகோதரிகள் சபையின் நிதி அறிக்கைக் குறித்து திருப்தியில்லை எனக் காரணம் காட்டி, இந்திய உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 25 அன்று வெளிநாட்டு உதவி பெறும் அனுமதியை புதுப்பிக்க மறுத்த நிலையில், அத்துறவு சபை தங்களின் வாங்கிக் கணக்குகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.